• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா! உலக வங்கி அறிக்கை

தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா! உலக வங்கி அறிக்கை

உலக வங்கி

உலக வங்கி

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலக வங்கி வெளியிட்டுள்ள எளிமையாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திலிருந்து 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    உலக வங்கியின் சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் எளிதாக தொழில் செய்வதற்கு வாய்யுள்ள நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 190 நாடுகளைக் கணக்கிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 77-வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    2018-ம் ஆண்டில்தான் இந்தியா 30 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 100 இடத்துக்குள் இடம் பெற்றது. மொத்த நாடுகளில் அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் 3.5 சதவீதத்துடன் இந்தியா 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. 7.7 சதவீதம் முன்னேற்றம் அடைந்து சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 5.6 சதவீதம் முன்னேற்றம் அடைந்து பாகிஸ்தான் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. தொழில்துறை சார்பாக குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைச் செய்ததன் மூலம், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ளது என்று உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் காரணமாக தனியார் துறைகள் உத்வேகம் அடைந்தன. வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் இந்த அறிக்கையில் முதல் 50 இடத்துக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: