• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சர்வதேச விலங்குகள் தினம் 2021 - அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள்!

சர்வதேச விலங்குகள் தினம் 2021 - அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள்!

சர்வதேச விலங்குகள் தினம் 2021

சர்வதேச விலங்குகள் தினம் 2021

இந்தியாவில் காணப்படும் மூன்று முதலை இனங்களில் கரியல் இன முதலைகளும் ஒன்று.

  • Share this:
பல உயிரினங்கள் சேர்ந்து வாழும் இந்த உலகில் ஒவ்வொன்றும் உலகளாவிய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகளை கவனித்து, அவற்றுடன் இணைந்து வாழ வேண்டியது மனிதர்களின் கடமை. இத்தகைய கவனக்குறைவினால் காடுகள் அழிப்பு, மனித விலங்குகள் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து சில விலங்குகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன.

இந்த விலங்குகளை பாதுகாக்கவும், விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி சர்வதேச விலங்குகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலாக 1925ம் ஆண்டு விலங்குகள் நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் 5 விலங்குகளைக் காணலாம்.

1. வங்கப் புலி

ராயல் பெங்கால் என அழைக்கப்படும் வங்கப்புலி உலகம் முழுவதும் பிரபலமானது. 10 அடி நீள உடலமைப்புடன், 550 பவுண்டுகள் எடையுடைய வங்கப் புலி, கம்பீரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்றது.



 

சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா, ரந்தம்போர் தேசிய பூங்கா, ஜிம் கார்பெட் தேசிய பூங்கா மற்றும் பந்தவ்கர் தேசிய பூங்காக்களில் வங்கப்புலிகளை காணலாம்.

2. கரியல்

இந்தியாவில் காணப்படும் மூன்று முதலை இன்ங்களில் கரியல் இன முதலைகளும் ஒன்று. இந்தியாவின் அடையாளமாக இருக்கும் கங்கை நதியிலேயே கரியல் முதலை இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.

World Animal Day 2021
கரியல்


சம்பல், ஐராவடி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்த முதலைகளைக் காணலாம். அருகிவரும் இனங்களில் ஒன்றாகவும் கரியல் முதலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நீர் மாசுபாடு, கரியல் முதலைகளின் எண்ணிக்கைக்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

3. ஆசிய சிங்கம்

ஆசிய சிங்கமானது உலகின் மிகப்பெரிய சிங்க இனங்களில் ஒன்றாகும். இந்தியாவைத் தவிர வேறு நாடுகளில் ஆசிய சிங்கங்கள் இல்லை. குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன.



IUCN சிவப்பு பட்டியலில் உள்ள ஆசிய சிங்கங்கள் 2010ம் ஆண்டு முதல் எண்ணிக்கையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு (2021) எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 674 சிங்கங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

4. சிவப்பு பாண்டா

இமயமலைப் பகுதிகளில் வாழக்கூடியது சிவப்பு பாண்டா. இமயமலையின் கிழக்குப் பகுதி, சிவப்பு பாண்டாக்களின் பூர்வீகமாக உள்ளது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக இதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.



சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கத்தின் காங்செண்ட்சோங்கா மற்றும் நம்தாபா பூங்காக்களில் சிவப்பு பாண்டாக்களை காணலாம்.

5. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக குறைந்துள்ளது. அதன் கொம்புகள் மருத்துவம் குணங்களுக்காக வேட்டையாடப்படுகிறது. தற்போது இந்தியாவில் காசிரங்கா தேசிய பூங்கா, துத்வா புலிகள் காப்பகம், போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆகிய பூங்காக்களில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.

World Animal Day 2021

இதேபோல், ஆசிய யானைக்களும் ஆபத்தில் விளிம்பில் இருக்கின்றன. தந்தம் உள்ளிட்டவைகளுக்காக அவை பெரும்பாலும் வேட்டையாடப்படுகின்றன. பல நாடுகளில் தந்தம் தடை செய்யப்பட்டாலும், சொற்பமான சில நாடுகளில் தந்தம் வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. இதுவே யானைகள் வேட்டையாடப்படுவதற்கு காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: