மத்தியப்பிரதேசத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் அடுத்த ட்ராகிற்கு தள்ளிச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
நம்மூரில் பொதுவாக டவுன் பஸ் சாலையில் பழுதாகி நிற்கும் அதை பயணிகள் ஓட்டுநர்கள் சாலையில் தள்ளிச் செல்வதை பார்த்திருப்போம். நமக்கு இந்த பேருந்து ப்ரேக் டவுன் ஒன்றும் புதிதல்ல தள்ளுவது புதிதல்ல. மத்தியப்பிரதேசத்துல நம்ம ஆட்களை ரயிலையே தள்ளி ஸ்டார்ட் பண்ணியிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. இந்த வீடியோ தான் இப்போ இணையத்துல ட்ரெண்டிங்ல இருக்கு. சரி சம்பவத்துக்கு வருவோம்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊழியர்கள் என்ற ரயில் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக செல்ப் எடுக்கவில்லை. மற்றொரு ரயிலை வரவழைத்து இழுத்துச் சென்றிருக்கலாம். பேருந்தா இருந்தா என்ன ரயிலா இருந்தா என்ன செல்ப் எடுக்கலையா தள்ளி ஸ்டார்ட் பண்ணுவோம் என அதிகாரிகள் முடிவெடுத்துவிட்டனர். ரயிலை இந்த ட்ராகில் இருந்து அடுத்த ட்ராகிற்கு கொண்டு சென்றால் பிரச்னை சரியாகிவிடும் என அதிகாரிகள் நினைத்தனர்.
பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை ரயிலை தள்ளும்படி அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர். அதிகாரிகள் சொன்னால் செய்தாக வேண்டுமே என ஊழியர்கள் ரயிலை தள்ளியுள்ளனர். அப்பகுதியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும் ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்த ரயிலை தள்ளிச்சென்றுள்ளனர்.
A technical fault with a tower wagon at Harda led to a heartbreaking sight - people forced to manually push the wagon from the main line to another track @ndtv@ndtvindiapic.twitter.com/WQTO0xhfEx
ஊழியர்கள் சிலர் காலில் செருப்பு கூட அணியாமல் கடுமையான வெயில் கூர்மையான ஜல்லி கற்களின் மீது தடுமாறியபடி ரயிலை வெறும் கையால் தள்ளினர். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஊழியர்கள் ரயிலை தள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஊழியர்கள் கையால் ரயிலை தள்ள வைத்த அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.