ஹோம் /நியூஸ் /இந்தியா /

அம்மா சொன்ன இந்த வாசகத்தை என்றும் மறக்க மாட்டேன் - பிரதமர் மோடி உருக்கம்

அம்மா சொன்ன இந்த வாசகத்தை என்றும் மறக்க மாட்டேன் - பிரதமர் மோடி உருக்கம்

தாய் ஹீரா பென்னுடன் பிரதமர் மோடி

தாய் ஹீரா பென்னுடன் பிரதமர் மோடி

தனது தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கத்துடன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் தனது 100ஆவது வயதில் காலமானார். பிரதமரின் தாயார் ஹீராபென் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்று மாலை பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்து மருத்துவமனையில் நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

இந்நிலையில், ஹீராபென் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில் கூறியதாவது, "ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் திருவடியில் இளைப்பாறுகிறது. அம்மாவிடம் நான் ஒரு தபஸ்வியின் பயனத்தையும், கர்மயோகியின் தன்னலமற்ற அடையாளத்தையும், மதிப்பீடுகளின் அடிப்படையிலான வாழ்க்கை ஆகிய மூன்றையும் எப்போதும் கண்டுள்ளேன்.

100ஆவது பிறந்தநாளில் நான் அவரை சந்தித்து போது அவர் என்னிடம் ஒரு விஷயம் கூறினார். 'வேலையை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும், வாழ்க்கையை தூய்மையுடன் வாழ வேண்டும்.' இந்த வார்த்தைகளை நான் என்றும் நினைவில் கொள்வேன்." இவ்வாறு பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தாய் ஹீராபென் மோடியுடன் பிரதமர் நரேந்திர மோடி..! அரிய புகைப்படங்கள்!

பிரதமர் மோடி குஜராத் பயணம் செல்லும் போது பெரும்பாலும் தனது தாய் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அவரின் ஆசியை பெற்றார்.

இந்த தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார்.

First published:

Tags: Gujarat, Heeraben Modi, Mother, PM Modi