Home /News /national /

Work from home? அல்லது ஹைப்ரிட் முறையா? இந்திய ஊழியர்களின் மனநிலை என்ன? இதோ ஆய்வு முடிவுகள்!

Work from home? அல்லது ஹைப்ரிட் முறையா? இந்திய ஊழியர்களின் மனநிலை என்ன? இதோ ஆய்வு முடிவுகள்!

இந்திய ஊழியர்

இந்திய ஊழியர்

ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது அலுவலகத்திற்கு வர சொல்லமா? என யோசித்த நிலையில்தான் வொர்க்கையும், லைப்பையும் பேலன்ஸ் செய்யும் ஹெப்ரிட் மாடலை சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது.

    இந்தியாவில் 73 சதவீத ஊழியர்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலகம் என இரண்டையும் சமாளிக்கும் ‘ஹைப்ரிட் மாடல் வேலையை (Hybird model work) விரும்புவதாக சமீபத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

    கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. குறிப்பாக பணிக்கு செல்வோரின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆம் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற வேலைக்காக ஓடிய காலங்களில் குடும்பத்தைச் சரியாக கவனித்துக்கொள்ள முடியாத நிலை தான் அதிகளவில் ஏற்பட்டது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீட்டில் இருந்த ஊழியர்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்புகளை வழங்கியது.

    2020 ஆண்டு முதல் தற்போது வரை பெரும்பாலான நிறுவனங்கள் ஒர்ம் ப்ரம் ஹோம் என்பதையே கொண்டுள்ளனர். இதனால் வேலையையும், குடும்பத்தோடு நேரத்தையும் பணியாளர்களால் செலவிட முடிகிறது. இந்நிலையில் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது அலுவலகத்திற்கு வர அழைக்கலாமா? என யோசித்த நிலையில்தான் வொர்க்கையும், லைப்பையும் பேலன்ஸ் செய்யும் ஹெப்ரிட் மாடலை சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது.

    இது சாத்தியமா? நிறுவனத்தில் முழு நேர பணிக்கு அழைக்கலாமா? அல்லது வீட்டில் ஹைப்ரிட் மாடலை நடைமுறைப்படுத்தலாமா? என்பது குறித்து சமீபத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சிபிஆர்இ சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd)ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் முடிவில், 73 சதவீத ஊழியர்கள் ஹைப்ரிட் வேலையைத் தேர்வு செய்கிறார்கள் என தெரியவந்துள்ளது. ஹைப்ரிட் மாடலின் படி, ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாள்கள், அலுவலகம் மற்றும் வீடுகளில் சமமாக வேலைப்பார்ப்பது, 3 நாள்களுக்கு மட்டுமே அலுவலகம் என பணிபுரியலாம். ஆனால் இந்த நடைமுறை என்பது நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் மாறுபடும் எனவும் கூறப்படுகிறது.

    ALSO READ | கொட்டும் மழையில் தார் ரோடு போட்ட ஒப்பந்ததாரர்.. பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்
     குறிப்பாக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை சமமாக பின்பற்றத் திட்டமிட்டுள்ளனர். மேலும் ESG கொள்கையின் படி, அலுவலகத்திற்கு பணியாளர்கள் திரும்ப வருவதற்கான அனைத்து பணிகளையும் முதலாளிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலக கட்டிடங்களை மாற்றுவதற்கான பணிகளையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள் என கூறப்படும் நிலையில், 7 சதவீதம் பேர் பிரீமியம் வாடகையுடன் கூட கட்டிடங்களை இடமாற்றம் செய்ய தயாராக இருப்பதாகவும் கணக்கெடுப்பில் கண்டறிப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 44 சதவீத நிறுவனங்கள் பிரத்யோக இருக்கை ஏற்பாடுகளைத் தக்க வைத்துள்ளன.


    ஆனால் இந்த எண்ணிக்கை என்பது கொரோனா தொற்றிற்கு முந்தைய காலங்களை விட 81 சதவீதம் குறைவாக உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து அன்ஷுமான் இதழ் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே அலுவலகத்திற்கு திரும்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார். ஆனால் கொரோனா தொற்றிற்கு பிறகு பல ஊழியர்கள் ஹைப்ரிட் மற்றும் தங்களுக்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கிறார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job, Work From Home

    அடுத்த செய்தி