• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எங்க ஊருக்கு ரோடும், பஸ்ஸூம் வந்தால் தான் கல்யாணம் – முதல்வருக்கு கடிதம் எழுதிய இளம்பெண்

எங்க ஊருக்கு ரோடும், பஸ்ஸூம் வந்தால் தான் கல்யாணம் – முதல்வருக்கு கடிதம் எழுதிய இளம்பெண்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கிராமத்தில் சாலை வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாததால் பெண் குழந்தைகள் கல்வி தடைபடுவதாக இளம்பெண் ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    கர்நாடகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய கிராமத்துக்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்துத்தரவேண்டும் என முதல்வருக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் தவனகிரி மாவட்டம் ஹெச்.ராம்புரா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் பிந்து. செப்டம்பர் 9-ம் தேதி பிந்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இமெயில் மூலம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தனது ஊருக்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் ஏற்படுத்தி தரும் வரை தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதில்லை எனக் கூறியுள்ளார். அந்த ஊரில் உள்ள ஒரே பட்டதாரி பெண் தான் என்பதாலும் நான் திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டால் இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுத்தர யாரும் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    Also Read: ஃபேஸ்புக்கில் தொடர்ந்த நட்பு.. கல்லூரி தோழியை ஏமாற்றி பணம் கறந்த இளைஞர் - புழல் சிறையில் அடைப்பு

    மேலும் அந்த கடிதத்தில் தான் வசிக்கும் கிராமமானது. தவனகிரில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நகரங்களுக்கு செல்ல சரியான சாலை வசதி, பேருந்து வசதி இல்லாத காரணத்தால் நான் விடுதியில் தங்கி என்னுடைய கல்லூரிப்படிப்பை நிறைவு செய்தேன். மருத்துவமனை, பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் இங்கிருந்து 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாயகொண்டா கிராமத்துக்கு செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த கடிதம் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்ற அதிகாரிகள் இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர். அதிகாரிகளும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிராமத்தை அடைந்தனர். வெள்ளிக்கிழமையன்று சாலைகளை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

    Also Read:  சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு.. கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் 

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிந்து, “ எங்க கிராமத்தில் 5 -ம் வகுப்பு வரைக்கும் படிக்க தொடங்கப்பள்ளி உள்ளது. அதற்கு மேல்படிக்க வேண்டும் என்றால் இங்கிருந்து 14 கி.மீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டும். இதன்காரணமாகவே பல பெண் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே தடைப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து எங்க ஊருக்கு சாலை, பேருந்து வசதி வேண்டி போராடி வருவதாக ஊர் பெரியவர்கள் கூறினர். இதன்காரணமாகதான் நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன்” எனக் கூறீனார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: