டெல்லியைப்போல வன்முறை செய்யமுடியாது, இது வங்காளம்.. கவனம்..! - மம்தா பானர்ஜி

வங்காளத்தை, மற்றொரு டெல்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிவிட அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

டெல்லியைப்போல வன்முறை செய்யமுடியாது, இது வங்காளம்.. கவனம்..! - மம்தா பானர்ஜி
மம்தா பேனர்ஜி
  • Share this:
வங்கதேசத்தில் இருந்து வந்து தோ்தலில் வாக்களித்த அனைவரும் இந்திய குடிமக்கள் என்றும், அவர்கள் குடியுரிமை கோரி புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, " டெல்லியில் நடத்தியதைப் போன்ற வன்முறையை மேற்கு வங்கத்தில் நடத்திவிட முடியாது. ஏனென்றால் இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் இந்த வங்காளத்தை, மற்றொரு டெல்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிவிட அனுமதிக்க மாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி சூளுரைத்தார். அதனைத் தொடர்ந்து  மேற்கு வங்கத்தில் வசிக்கும் அனைவருமே இந்திய குடிமக்கள். குடியுரிமைகோரி புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


Also see...

  
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading