முகப்பு /செய்தி /இந்தியா / 50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பா? - ஆதார் ஆணையம் விளக்கம்

50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பா? - ஆதார் ஆணையம் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆதார் விபரங்களை பெற்ற தனியார் நிறுவனங்கள் அதனை அழிக்க வேண்டியது உள்ளதால், 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  • 1-MIN READ
  • Last Updated :

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஆதார் தகவல்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இதனால், வாடிக்கையாளர்களின் மாற்று விபரங்கள் இல்லாத காரணத்தால் மொபைல் எண்களை துண்டிக்கலாம் என செய்திகள் வெளியான நிலையில், ஆதார் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

சிம்கார்டுகள் வாங்கும் போது வாடிக்கையாளர்களின் விபரங்கள் கே.ஒய்.சி (Know Your Customer) என்ற படிவத்தில் பெறப்படும். ஆதார் வருகைக்குப் பின்னர் இந்த கே.ஒய்.சி முறை மிக எளிதானது. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு, நமது கைரேகையை வைப்பதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை தானாகவே அது எடுத்துக்கொள்ளும். இம்முறையில், சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டு செப்டம்பரில் தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இந்த முறையில் இணைப்புகளை வழங்கியுள்ளன.

ஆதாருக்காக பதியப்படும் விரல் ரேகைகள்

ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கே.ஒய்.சி படிவத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழித்திருக்கக்கூடும்.

சமீபத்தில், ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் கேட்கக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதுவரை பெற்ற ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் அழிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, ஆதார் மூலம் கே.ஒய்.சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, மாற்றாக வாடிக்கையாளர் விவரங்களை புதிதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

இதற்கிடையே, மேற்கண்ட பிரச்னையால் 50 கோடி செல்போன் தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல்கள் மறுத்துள்ள ஆதார் ஆணையம், இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் ஆதார் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். எந்த காரணத்துக்காகவும் மொபைல் எண் துண்டிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் தங்களது பயன்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முறையிட்டு ஆதார் இணைக்கப்பட்ட கே.ஒய்.சி.யை அழித்துவிட்டு ஆதார் இல்லாமல் புதிய கே.ஒய்.சி அளித்துக்கொள்ளலாம்” என ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய செய்திகள்:

சூட்கேசில் மாடல் அழகி உடல்: செக்ஸுக்கு மறுத்ததால் கொலை 

கட்டாய மதமாற்றம் என்பதற்கு ஆதாரம் இல்லை - ஹாதியா வழக்கை மூட என்.ஐ.ஏ முடிவு

First published:

Tags: Aadhaar card, KYC, Mobile networks, Mobile phone, UIADI