• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாராஷ்டிராவில் அகதிகள் தடுப்பு மையத்துக்கு அனுமதியளிக்க மாட்டோம் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அகதிகள் தடுப்பு மையத்துக்கு அனுமதியளிக்க மாட்டோம் - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

கேரளா மற்றும் மேற்குவங்க அரசுகள் மட்டும் இந்நடைமுறையை நிறுத்துவதாகவே அறிவித்துவிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையின் கீழ் அகதிகள் தடுப்பு முகாம்களை அமைக்க மஹாராஷ்டிரா ஒருநாளும் அனுமதி அளிக்காது எனத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

    தடுப்பு மையங்கள் அமைக்க முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் எடுத்த முடிவை எதிர்த்து அந்த நடைமுறையை நிறுத்துவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே நவி மும்பையில் முதல் அகதிகள் தடுப்பு மையம் அமைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமிய அரசியல்வாதிகளைச் தாக்கரே சந்தித்தார்.

    தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையின் மூலம் இஸ்லாமிய மக்கள் மட்டும் அகதிகளாக்கப் படுவர் என்ற கூற்று பரவலாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து பயம் கொள்ளத்தேவையில்லை என்றும் தேசிய குடியுரிமைச் சட்டம் சார்ந்த நடைமுறைகளை மகாராஷ்டிரா மாநிலம் அனுமதிக்காது என்றும் தாக்கரே தெரிவித்தார்.

    இதுவரையில் இந்தியாவிலேயே 10 மாநில முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் NRC நடைமுறையை அனுமதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளர். கேரளா மற்றும் மேற்குவங்க அரசுகள் மட்டும் இந்நடைமுறையை நிறுத்துவதாகவே அறிவித்துவிட்டனர். ஆனால், தாக்கரே இதுவரையில் இதுகுறித்து முழுமையான விளக்கம் அளிக்கவில்லை.

    அகதிகள் தடுப்பு முகாம்களுக்கு மட்டுமே விளக்கம் அளித்துள்ளார். ஜனவரி 22-ம் தேதிக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் CAA-வுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கத் தொடங்குகிறது. இதன் பின்னரே முடிவு எடுக்கமுடியும் என்கிறது மஹாராஷ்டிரா அரசு.

    மேலும் பார்க்க: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: