‘மது குடிப்பதை விட்டுவிட்டேன்’ புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றிய எம்.பி!

எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து மது குடித்துவிட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக பக்வாந்த் மன் மீது புகார் முன் வைக்கப்பட்டு வந்தது.

‘மது குடிப்பதை விட்டுவிட்டேன்’ புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றிய எம்.பி!
ஆம் ஆத்மி எம்.பி
  • News18
  • Last Updated: January 21, 2019, 10:40 AM IST
  • Share this:
புத்தாண்டு முதல் மது குடிப்பதை விட்டுவிட்டேன் என்று சபதம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி எம்.பி பக்வாந்த் மன், என் இதயத்தை வென்று விட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வாக்குவங்கி இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 4 இடங்களில் அக்கட்சி வென்று ஆச்சரியப்பட வைத்தது. மேலும், அம்மாநில சட்டமன்ற தேர்தலிலும் 20 இடங்களில் அக்கட்சி வென்றது.

இந்நிலையில், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த முறை சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பக்வாந்த் மன், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார்.


சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பக்வாந்த் மன், தனது தாயின் அறிவுரைப்படி புத்தாண்டில் இருந்து மது குடிப்பதை விட்டுவிட்டேன் என்று கூறினார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “பக்வாந்த் மன் எனது இதயத்தை வென்று விட்டார்” என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து மது குடித்துவிட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக பக்வாந்த் மன் மீது புகார் முன் வைக்கப்பட்டு வந்தது.2016-ம் ஆண்டில் சக எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தில் பக்வாந்த் மன் மீது மதுநெடி வீசுகிறது அதனால், என்னை வேறு இடத்தில் உட்கார வையுங்கள் என்று சபாநாயகரிடம் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also See...

First published: January 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்