முகப்பு /செய்தி /இந்தியா / காலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் திடீர் செய்கை!

காலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் திடீர் செய்கை!

மோடி

மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.  அங்கிருந்த பெண்கள் இருவர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.  அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி பதில் மரியாதை செய்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளார்.  வாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி ரூ.1,580 கோடி மதிப்பிலான திட்டங்களை  தொடங்கி வைத்தார்.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் சேய் மருத்துவப் பிரிவு, பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம், வாரணாசி- காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து ஆகிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக, இந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.  அங்கிருந்த பெண்கள் இருவர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.  அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார்.  இதை பார்த்தது சுதாரித்து விலகிய மோடி, அப்பெண்ணை நோக்கி குணிந்து பதில் மரியாதை செய்தார்.

இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்- இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்!

இது தொடர்பான வீடியோவை  பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன்,  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமரின் செயல் பெண்கள் மீதான அவரது உயர்ந்த மரியாதையை காட்டுவதாகவும்  கூறியுள்ளார்.

First published:

Tags: PM Narendra Modi, Uttar pradesh, Varanasi