HOME»NEWS»NATIONAL»women take over protests for a day to mark women farmers day amid ongoing agitation vin ghta

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெண் விவசாயிகள் போராட்டம் - பிடிக்கொடுக்காத மத்திய அரசு!

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து இந்திய டெமாகிரெட்டிக் பெண்கள் கூட்டமைப்பு (AIDWA), பெண்களும் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது நிலைமை மோசமாகியிருப்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெண் விவசாயிகள் போராட்டம் - பிடிக்கொடுக்காத மத்திய அரசு!
படம் - ட்விட்டர்
  • News18
  • Last Updated :
  • Share this:

வேளாண் மசோதாக்களை திரும்பப்பெறக்கோரி திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்ற போராட்டத்தில் பெண் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால், விவசாய சங்கங்கள் ஜனவரி 18 ஆம் தேதியை "பெண் விவசாயிகள் தினம்" என அழைத்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், 3 சட்டங்களையும் திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என விவசாயிகள் ஒரே குரலில் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் தலையிட்டபோதும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, பெண் விவசாயிகளும் மத்திய அரசுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். போராட்டக்களத்தின் மையமாக இருக்கும் சிங்கு எல்லைப்பகுதியில் (Singhu border) ஆயிரக்கணக்கான பெண்கள் திங்கட்கிழமை (ஜனவரி 18) மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். சிங்கு எல்லைப்பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் முழுவதும் பெண்கள் மட்டுமே நிரம்பியிருந்தனர். இதுகுறித்து பேசிய அனைத்து இந்திய கிசான் கூட்டமைப்பைச் (AIKSCC) சேர்ந்த கவிதா குருங்கந்தி (Kavitha Kuruganti), " விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். 



Also read... சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக 22-ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

பல்வேறு இடங்களில் தர்ணா, ஊர்வலம், பிரச்சாரக் கூட்டம் என பெண்கள் தாமாக முன்வந்து வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்", என்றார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மூத்த பெண்களுக்கு உதவ தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், டெல்லி எல்லைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டத்திலும் பெண்கள் கலந்து கொண்டனர். மகிளா அமைப்பினரும் பெண் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், ஜனவரி 18 ஆம் தேதியை ( நேற்றைய போராட்டம்) பெண் விவசாயிகள் நாள் என விவசாய அமைப்புகள் அழைத்தனர். 

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து இந்திய டெமாகிரெட்டிக் பெண்கள் கூட்டமைப்பு (AIDWA), பெண்களும் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது நிலைமை மோசமாகியிருப்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், கடன்சுமை, 100 நாள் வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் குடும்ப பெண்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. Kisan Ekta Morcha அமைப்பு, டிவிட்டர் மூலம் #WomenFarmersAgainstFarmLaws என்ற ஹேஸ்டேக்கின் கீழ் பெண்களின் பங்களிப்புகளை பட்டியலிட்டது. விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 புதிய சட்டங்களும் தவறான வழியில் புரிந்து கொள்ளப்பட்டு, போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்படுவதாக மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: