குளிர்பானத்தில் மயக்க மருந்து.. இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ் கான்ஸ்டபிள்

மாதிரிப்படம்

இளம்பெண்னை பாலியல் வன்கொடுகை செய்து மிரட்டிய போலீஸ் நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

 • Share this:
  போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் மாமா இரண்டு வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

  இளம்பெண் குடுபத்தினர் மிர்சாபூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மாமா உ.பி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ஆம் கும்பமேளாவில் கலந்துக்கொள்வதற்காக இளம்பெண் குடும்பத்தை அலகாபாத் அழைத்துள்ளார். அதன்பேரில் கும்பமேளாவை காண அலகாபாத் வந்துள்ளனர்.

  Also Read: இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் இளைஞர்கள்..பதற வைக்கும் வீடியோ - கர்நாடகாவில் நடந்த கொடூரம்

  அந்தப்பெண் அலகாபாத்தில் இருந்தபோது அவரது மாமா ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அந்தப்பெண்ணுக்கு  குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அந்தப்பெண் மயக்கமடைந்ததும் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அந்தப்பெண் கண்விழித்து பார்த்ததும் தனக்கு நடந்ததை நினைத்து கண்ணீர்விட்டுள்ளார். அவரது மாமாவிடம் சண்டை போட்டுள்ளார். நீ இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

  மேலும் இந்த  வீடியோவை காட்டி அந்தப்பெண்ணை கான்பூர், அலகாபாத் நகரங்களுக்கு அழைத்து சென்று கடந்த இரண்டு வருடங்களில்  பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்காரணமாக அந்தப்பெண் கர்ப்பமாகியுள்ளார். மெடிக்கலில்  மாத்திரை வாங்கிக்கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மாமாவும் அவரது மகனும் கான்பூரில் ஒரு அறையில் வைத்து அடைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து அவரை மிரட்டுவதற்காக மேலும் ஒரு வீடியோ எடுத்துள்ளனர்.

  இதனையடுத்து அவர்களது பிடியில் இருந்து தப்பிய பெண் போலீஸ் உதவி எண்ணுக்கு அழைத்துவிட்டு கங்கை நதியில் இருந்து குதித்தார். போலீஸாரை அந்தப்பெண்ணை மீட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மகன் இன்னும் கைது செய்யப்படவில்லை. அந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்தப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: