ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயிலில் இருக்கைக்காக முடியை பிடித்துகொண்டு சண்டையிட்ட பெண்கள்... வைரலாகும் வீடியோ

ரயிலில் இருக்கைக்காக முடியை பிடித்துகொண்டு சண்டையிட்ட பெண்கள்... வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

தகராறை தீர்க்க முயன்ற 3 பெண்கள் இதில் காயமடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  மும்பையில் மின்சார ரயிலில் முடியை பிடித்து சண்டையிட்டு கொண்ட பெண்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ரோட்ஸ் ஆப் மும்பை என்ற பயனரால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் மின்சார ரயிலில், 3 பெண்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர்.தகராறை தீர்க்க முயன்ற 3 பெண்கள் இதில் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ரயிலின் இருக்கைக்காக சண்டையிட்டு கொண்ட இந்த பெண்களின் வீடியோ ட்விட்டரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  Spirit of Mumbai - Part 4pic.twitter.com/CoyXl8TrPq

  இந்த சம்பவத்தை வெட்கக்கேடானது என பலர் கருத்து தெரிவித்தாலும், சிலர் இந்த நகரத்தில் உள்ள மக்களின் அன்றாட போராட்டத்தின் விளைவு என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Mumbai, Viral Video