ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பிரச்சனை தீரும் வரை ஆண்களுக்கு பதவி உயர்வு கிடையாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பிரச்சனை தீரும் வரை ஆண்களுக்கு பதவி உயர்வு கிடையாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

ராணுவ பெண்கள் - பதவி  உயர்வு

ராணுவ பெண்கள் - பதவி உயர்வு

பெண் ராணுவ வீரர்கள் கீழ் பயின்ற இளையவர்கள் எல்லோரும் அதிகாரிகள் ஆக பெண்களுக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இந்த பிரச்சினை தீரும் வரை, அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்துமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராணுவத்தை பொறுத்தவரை அதிக பாகுபாடுகள், பாரபட்சங்கள் பார்க்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ராணுவத்தில் ஆண்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பெண்களின் எண்ணிக்கை என்பது மிகக்குறைவே. அதுவும் உயர் பதவிகளில் பார்ப்பது அரிதானது.

வழக்கு என்ன?

ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான தேர்வு வாரியம் நடத்தப்படுகிறது. ஆனால், பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க படுவதில்லை எனக் கூறி இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இதையும் படிங்க :உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்.. தொடர்ந்து 4ஆவது முறையாக இடம் பிடித்தார் நிர்மலா சீதாராமன்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நர்சிம்மா அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, 2022 நவம்பரில் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட கடிதத்தின்படி, "சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், அதிகாரிகளால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு வாரிய SB3 மற்றும் SB2 ஆகியவற்றில் பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

பெண் ராணுவ வீரர்கள் கீழ் பயின்ற இளையவர்கள் எல்லோரும் அதிகாரிகள் ஆக பெண்களுக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மற்றும் அட்வகேட் கர்னல் பாலசுப்ரமணியம் ஆகியோர், நிதி அமைச்சகம் சமீபத்தில் 150 காலியிடங்களுக்கு அனுமதி வழங்கியதாகவும், அதற்கான தேர்வு வாரியங்கள் 2023 ஜனவரிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : பெட்ரோலில் எத்தனால் கலப்பு.. ரூ.20,000 கோடி மிச்சம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அனால் நீதிபதிகள் குழு "இந்த பெண் அதிகாரிகளிடம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்கள் நியமன யுக்தியை ஒழுங்கமைக்க வேண்டும். பனி என்பது அனைவருக்கும் சமம். அதில் பாலின அடிப்படியில் வேறுபாடு காட்டக்கூடாது. பெண் அதிகாரிகளின் பிரச்சினை பரிசீலிக்கப்படும் வரை அக்டோபரில் நடத்தப்பட்ட SB3 இன் கீழ் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்துமாறு” ராணுவ அதிகாரிகளை அமர்வு கேட்டுக் கொண்டது.

தற்போதைய காலிப் பணியிடங்களுக்கு பெண் அதிகாரிகள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்றும் நீதிமன்ற அமர்வு ராணுவத்திடம் விளக்கம் கேட்டது. மேலும் இது குறித்த விசாரணை வரும் டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

First published: