தேர்வு அறையில் குழந்தைக்கு தாய்ப்பால் தர அனுமதி மறுத்த கல்லூரி!

”மாட்டுப்பால் கொடுக்க முயன்று அது குழந்தையின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்துள்ளார்.”

news18
Updated: August 3, 2019, 12:40 PM IST
தேர்வு அறையில் குழந்தைக்கு தாய்ப்பால் தர அனுமதி மறுத்த கல்லூரி!
தாய்ப்பால் வாரம்
news18
Updated: August 3, 2019, 12:40 PM IST
ஜெய்பூரில் கல்லூரித் தேர்வு எழுத வந்த பெண்ணின் எட்டு மாத குழந்தைக்குத் தாய்பால் கொடுக்க அனுமதி மறுத்த சம்பவம் நடந்துள்ளது.

சர்வதேச தாய்ப்பால் ஊட்டுதல் வாரம் கொண்டாடப்படும் நிலையில், அது குறித்து உலகம் முழுவதும் மூன்று நாட்களாக பிரசாரங்கள், விழிப்புணர்வுகள் நடத்திவரும் நேரத்தில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பூர் பாஸ்ஸியைச் சேர்ந்த நிர்மலா குமாரி பைர்வா (23) என்னும் பெண், அங்குள்ள கல்லூரியில் பி.ஏ வரலாறு இறுதி ஆண்டுத் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அவருக்கு எட்டு மாதக் குழந்தை இருக்கிறது. தேர்வு எழுதிய போது கணவர் கலு ராம் அறைக்கு வெளியே குழந்தையுடன் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.


திடீரென குழந்தை அழுதுள்ளது. காலை 6.30 மணிக்கே தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்பதால் சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சென்றுள்ளார். பின் 7.15 மணியளவில் குழந்தை பசியால் அழுதுள்ளது. சமாளிக்க முடியாத கணவர் குழந்தையுடன் பரிட்சை அறைக்குச் சென்று மனைவியை குழந்தைக்கு பால் கொடுக்க அனுமதிக்கச் சொல்லி கேட்டுள்ளார்.

ஏற்கனவே மாட்டுப்பால் கொடுக்க முயன்று அது குழந்தையின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்துள்ளார். அதனால் தாய்ப் பால் மட்டும்தான் கொடுத்து வருகிறோம் என தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர் விதிமுறைகள் படி உள்ளே அனுமதிப்பது தவறு. எனவே அனுமதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த கல்லூரியின் முதன்மை ஆசிரியர் பிரமிலா ஜோஷ் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “ எங்களுக்கும் இரக்கம் உள்ளது. ஆனால் அப்படி செய்தால் அது விதிமீறலாக இருக்கும். தேர்வுக் கட்டுப்பாட்டாளரிடமும் அனுமதி கேட்டோம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. நிர்மலா தேர்வு எழுதி முடிக்கும் வரை வெளியே காத்திருக்கச் சொல்லுங்கள் என்றுக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

Loading...

Read... தாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...? குரல் கொடுக்கும் அம்மாக்கள்

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...