கோவிலுக்குள் நுழைய முற்றிலும் தடை - 2 கி.மீ முன்னரே நிறுத்தப்படும் பெண்கள்

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 1 8 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வழிபாடு செய்யும் ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவிலுக்குள் பெண்கள் செல்லாக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 9:39 AM IST
கோவிலுக்குள் நுழைய முற்றிலும் தடை - 2 கி.மீ முன்னரே நிறுத்தப்படும் பெண்கள்
ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவில்
Web Desk | news18
Updated: December 6, 2018, 9:39 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழகம்-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பெண்கள் நுழைய முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் - கர்நாடகம் மாநில எல்லையான தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவில் அமைந்துள்ளது.

லிங்காயத்து பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வழிபட்டு வருகின்றனர். தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து தினந்தோறும்  ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.

இக்கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையக் கூடாது என்பது ஐதீகம் என்பதால், 2 கிலோ மீட்டருக்கு முன்பே பெண்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால், பெண்கள் உள்ளே நுழைந்தால் அவரது 1,600 ஆண்டுகால தவம் கெட்டுவிடும் என்பது லிங்காயத்து பழங்குடியினர்களின் ஐதீகமாக இருந்து வருகிறது. அதனாலேயே பெண்களை உள்ளே நுழைய விட மறுத்து ஆண்கள் மட்டுமே ஆண்டு ஆண்டுகாலமாக வழிபாடு நடத்துகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரியில் நடைபெறும் குண்டம் திருவிழாவில், 1000-கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குகிறார்.

பூசாரியைத் தவிர மற்ற பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்ற ஐதீகத்தால் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபடுகின்றனர். முனிவர் அவதாரத்தில் வரும் சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தனத்தோப்பில் இருந்து வழிபாடு நடத்துகின்றனர்.
Loading...
கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால் வன விலங்குகளிடம் இருந்து அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதாகவும் இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Also see... அரசியல் வருகை குறித்து நடிகர் விஷால் பேட்டி!
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...