Home /News /national /

தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க.. ராகுல் காந்தியை வெட்கப்பட வைத்த பெண்கள்

தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க.. ராகுல் காந்தியை வெட்கப்பட வைத்த பெண்கள்

ராகுல் காந்தியின் 3வது நாள் பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தியின் 3வது நாள் பாரத் ஜோடோ யாத்திரை

கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மார்த்தாண்டம் பகுதியில் பெண்களுடன் கலந்துரையாடும்போது அவருக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக அப்பெண்கள் கூறினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளாகக் கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டார். இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் MGNREGA வேலை செய்யும் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் ராகுல் காந்தியைத் தமிழ்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு சொன்னதை ராகுல் காந்தி வியப்புடன் எதிர்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளாக கடந்த 9ம் தேதி  நடைப்பயணத்தில் மார்த்தாண்டம் பகுதியில்  100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் ராகுல் காந்திக்குத் தமிழ்நாடு என்றால் பிடிக்கும், தமிழ்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கல்யாணம் பேச்சை எடுத்துள்ளனர்.

    அந்த கேள்விகளுக்கு வெட்கத்துடன் ராகுல் காந்தி எதிர்கொண்ட தருணத்தைக் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ராகுல் காந்தி பெண்களுடன் கலந்துரையாடும் நிகழ்வையும் அதன் பின்னர் ராகுல் காந்தியின் சிரிப்பையும் புகைப்படமாகப் பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் வியப்பு புகைப்படத்தில் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது யாத்திரையில் நடத்தச் சிரிப்பான தருணம் என்று பதிவிடப்பட்டுள்ளது.



    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களைச் சந்தித்துத் தொடர்ந்து எளிமையான முறையில் மக்களுடன் தேனீர் அருந்தியும் இணைந்து கலந்துரையாடியும் வருகிறார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Congress, Kanniyakumari, Rahul gandhi

    அடுத்த செய்தி