மாமியாருடன் தகராறு...மலைமீது குடியேறி குழந்தையைப் பறிகொடுத்த மருமகள்

மாமியாருடன் தகராறு...மலைமீது குடியேறி குழந்தையைப் பறிகொடுத்த மருமகள்
மாமியாருடன் தகராறு
  • Share this:
ஆந்திர மாநிலத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் மலை மீது குடியேறிய மருமகளை போலீசார் தேடி கண்டுபிடித்த நிலையில், குழந்தை இறந்துவிட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட பெண்டுர்தி கிராமத்தை சேர்ந்த அப்பாராவின் மனைவி குஷ்மலதா தனது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் அருகே உள்ள மலைக் குன்றின் மீது குடியேறியுள்ளார். அப்பாராவ் அளித்த புகாரின் பேரில் மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 நாட்கள் தேடுதலுக்கு பின் குஷ்மலதாவை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆனால், மலைப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் குழந்தை இறந்துவிட்டதாகவும், அதனை மலையிலேயே புதைத்துவிட்டதாகவும் குஷ்மலதா கூறியுள்ளார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் இறந்ததா? அல்லது வேறு காரணமா எனத் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.


First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்