• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அமித்ஷா

அமித்ஷா

அசாம், மேற்குவங்க மாநிலங்களில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு சில தங்க பிஸ்கெட்டுகளுக்காக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரிகளும் கேரள கலாச்சாரத்திற்கு வெக்கக்கேடானது என்று விமர்சித்தார். இடதுசாரி ஆட்சியில் பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு அக்கட்சி வெக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இடதுசாரி தலைவர்கள் இளம் குண்டர்களை போன்று நடந்து கொள்வதாகவும் விமர்சித்த மோடி, பாஜக ஆட்சி அமைந்துதும் வன்முறைக்கு முடிவு கட்டப்படும் என்றார்.

    சில வெள்ளி காசுகளுக்காக யூதாஸ் ஏசு கிறிஸ்துவை காட்டி கொடுத்ததைப் போல், சில தங்க காசுகளுக்காக ஆளும் இடதுசாரி அரசு மக்களுக்கு துரோகம் இழைத்திருப்பதாகவும் பகிரங்கமாக சாடினார்.

    மேற்குவங்கத்திலும், டெல்லியிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படும் இடதுசாரி முன்னணி, கேரளத்தில் மட்டும் காங்கிரஸை எதிர்ப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். கேரளாவில் துரித வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    இதனிடையே, மேற்குவங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் ஒன்றாம் தேதி (நாளை) நடைபெறுகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உட்பட 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் மாலையுடன் நிறைவடைந்தது. முன்னதாக நந்திகிராமில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பேரணி சென்றார்.

    அப்போது, நந்திகிராம் இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த தொகுதியில் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி கூறினார். இந்த தேர்தலில் பாஜகவை அடக்கம் செய்ய வேண்டும் என்றும், நந்திகிராமில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார். அப்போது பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் பாஜக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

    மேலும் படிக்க...பிரசாரக் களத்தில் மோடி Vs ராகுல் வாக்காளர்களை ஈர்க்கப்போவது யார்?

    இதேபோன்று அசாமில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: