ஹோம் /நியூஸ் /இந்தியா /

தாண்டியா நடனத்தின் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு செய்யும் பெண்கள்..!

தாண்டியா நடனத்தின் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு செய்யும் பெண்கள்..!

தாண்டியா நடனத்தின் மூலம் ஹெல்மட் விழிப்புணர்வு செய்யும் பெண்கள்..!

தாண்டியா நடனத்தின் மூலம் ஹெல்மட் விழிப்புணர்வு செய்யும் பெண்கள்..!

ஹெல்மட் அனைவரும் அணிவது அவசியம். இது அரசாங்கம் மட்டுமே முன்னெடுத்து விழிப்புணர்வு செய்வது மட்டுமலாமல் மக்கள் ஒவ்வொருவருக்கும் அதன் விழிப்புணர்வு அவசியம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்த வருட நவராத்திரி கொண்டாட்டம் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு செய்யும் வகையில் நடைபெற்று வருகிறது. மக்களே இந்த சமூக நலனை வழிநடத்துவது மகிழ்ச்சிக்குறிய விஷயம் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தாண்டியா நடனம் ஆடும் பெண்கள் மோடி, சந்திராயன்2 , காஷ்மீர் விவகாரங்களை முதுகில் டாட்டூவாக குத்தி நாட்டின் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக கொண்டாடும் செய்தி சமூகவலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், சூரத்தில் வி.ஆர் ஷாப்பிங் மாலில் தாண்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள், ஆண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கோலாட்டம் ஆடி மகிழ்ச்சியோடு விழிப்புணர்வையும் பரப்பியுள்ளனர்.

”ஹெல்மெட் அனைவரும் அணிவது அவசியம். இது அரசாங்கம் மட்டுமே முன்னெடுத்து விழிப்புணர்வு செய்வது மட்டுமலாமல் மக்கள் ஒவ்வொருவருக்கும் அதன் விழிப்புணர்வு அவசியம். அது உயிர் காக்கும் கவசம் என்பதை நீங்கள் உணர வேண்டும். காரில் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம்” என அந்த நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பார்க்க:

சிவாஜி எனும் அரசியல்வாதி

First published:

Tags: Navrathri