Home /News /national /

மாதவிடாய் நாட்களில் இனி சம்பளத்துடன் விடுப்பு...!

மாதவிடாய் நாட்களில் இனி சம்பளத்துடன் விடுப்பு...!

menstrual time

menstrual time

நாட்டிலேயே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு அறிவிக்கும் மூன்றாவது நிறுவனமாக இந்த மீடியா நிறுவனம் உள்ளது.

  • News18
  • Last Updated :
மாதாமாதம் இனி மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கான புத்தாண்டு அறிவிப்பாக இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்காக சம்பளத்துடனான மாதவிடாய் கால விடுமுறையை ஒவ்வொரு மாதமும் தர உள்ளது. FlyMyBiz என்னும் டிஜிட்டல் மீடியா நிறுவனத்தில் மாதம் ஒரு நாள் இந்த விடுப்பு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து FlyMyBiz நிறுவனர் சாமியோ தத்தா கூறுகையில், “எங்களது நிறுவனப் பெண் ஊழியர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு வழங்குகிறோம்.

ஜனவரி 2019 முதல் இத்திட்டம் அமலில் வரும். அரசு விடுமுறைகள், ஊதியத்துடனான விடுமுறைகள் போக கூடுதலாக ஆண்டுக்குப் 12 நாள்கள் பெண்களுக்குக் கூடுதல் விடுப்பு உள்ளது. ஊழியர்களின் நலன் எப்போதுமே முக்கியம். அவர்களின் திருப்தி நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.”

மேற்கு வங்களாத்தில் இப்புதிய விடுப்பு முறையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற அங்கீகாரத்தையும் FlyMyBiz நிறுவனம் பெற்றுள்ளது. நாட்டில் இது மூன்றாவது நிறுவனமாகும். இத்திட்டத்தை மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் முன்னதாகவே அமல்படுத்தி உள்ளன.

மேலும் பார்க்க: காஷ்மீரில் பாஜக தெரியும்! திமுக தெரியுமா? தமிழிசை அசத்தல் கேள்வி
Published by:Rahini M
First published:

Tags: Kolkata

அடுத்த செய்தி