• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாகா to அருணாச்சல்... 2 பெண்களின் 5,000 கி.மீ சைக்கிள் பயணம்! எதற்காக தெரியுமா?

வாகா to அருணாச்சல்... 2 பெண்களின் 5,000 கி.மீ சைக்கிள் பயணம்! எதற்காக தெரியுமா?

சைக்கிள் பயணத்தை எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி பூபீந்தர் சிங் (Bhupinder Singh) கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சைக்கிள் பயணத்தை எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி பூபீந்தர் சிங் (Bhupinder Singh) கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து பெண்களுக்கான உரிமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார். பெண்கள் இருவரின் சைக்கிள் பயணத்தை எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி பூபீந்தர் சிங் (Bhupinder Singh) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காற்றுமாசு, பெண் உரிமையை வலியுறுத்தி 2 பெண்கள், வாகா எல்லை முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 5 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகப்பெரும் கவலையாக மாறியுள்ளது. டெல்லி, கான்பூர், பரிதாபாத், பாட்னா, ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிலவும் காற்று மாசு மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றவையாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அந்தளவுக்கு காற்றின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் காற்று மாசு பிரச்சனை இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் காற்று மாசு பிரச்சனை இருக்கிறது.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாடு இருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலை எடுத்தால், சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா, தெற்கு கொரியா, கனடா ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு 37 பில்லியன் டன் கார்பன் காற்றில் கலப்பதாக கூறப்படுகிறது. இதில் 27 விழுக்காடு கார்பனை சீனாவும், 15 சதவீதம் அமெரிக்காவும் உமிழ்வதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா ஏறத்தாழ 7 விழுக்காடு கார்பனை உமிழ்ந்து காற்றுமாசுக்கு காரணமாக உள்ளது. காற்றுமாசுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக கூறப்படுகிறது. 

கார்பன் துகள்கள், சிமெண்ட் மாசு, வாகன புகை, கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் காற்று மாசு ஏற்படுகின்றன. கெரோனா ஊரடங்கால், மக்கள் நடமாட்டம் முடங்கி, தொழிற்சாலைகளும் நிறுத்தப்பட்டிருந்ததால் காற்றின் தரம் உயர்ந்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசு பெருகி வருவதால், அது குறித்து பல்வேறு நிலைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 2 பெண்கள் முன்மாதிரியாக காற்று மாசை குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

இந்தியாவின் வாகா எல்லை முதல் அருணாச்சலப் பிரதே மாநிலம் வரை 5000 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் பயணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். இது குறித்து பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுருதிராவத் (Suruti Rawat) என்ற பெண், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து இமயமலையை காக்கவும், பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டவும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக கூறினார். 

Also read... ஜனவரி 2021ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் இவைகள் தான்!

தங்களின் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு உத்தரகாண்ட் மாநில அரசு முழு உதவியும் செய்வதாக தெரிவித்துள்ள அவர், பயணத்தின்போது பல்வேறு நபர்களை சந்தித்து காற்று மாசுவின் ஆபத்து மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளதாக கூறினார். பீகாரைச் சேர்ந்த சவிதா மகதாவ் (Sawita Mahtav) பேசும்போது, மாசு இல்லாத காற்று மற்றும் சுத்தமான பூமி என்பதே தங்களுடைய இலக்கு எனக் கூறினார். 

மேலும், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து பெண்களுக்கான உரிமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார். பெண்கள் இருவரின் சைக்கிள் பயணத்தை எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி பூபீந்தர் சிங் (Bhupinder Singh) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அட்டாரி - வாகா எல்லையில் இருந்து புறப்பட்ட அவர்களின் சைக்கிள் பயணம் 7 இந்திய மாநிலங்கள் வழியாக பயணித்து இறுதியாக அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிறைவடைகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: