Home /News /national /

கட்சி வேட்டி கட்டாத எம்.பி வைத்திலிங்கம்..! விழா மேடையில் கேள்வி எழுப்பிய மகளிர் காங்கிரசார்

கட்சி வேட்டி கட்டாத எம்.பி வைத்திலிங்கம்..! விழா மேடையில் கேள்வி எழுப்பிய மகளிர் காங்கிரசார்

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை என்று மகளிர் அணியினர் எம்.பி வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் எம்.பி வைத்திலிங்கம், புதுச்சேரியில் காங்கிரஸ் பலமாகத்தான் உள்ளது. வெளிமாநிலத்திற்கும், அண்டை மாநிலத்திற்கும் செல்லும்போது நாம் காங்கிரஸ்காரர்கள் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். பெண்கள் தங்கள் அலங்காரப் பொருட்களில்கூட கட்சியின் கொடி, சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் அணிய வேண்டும். வாகனங்களில் கட்சி கொடி, கை சின்னத்தை இடம்பெற செய்ய வேண்டும்.

அப்போதுதான் மற்றவர்களுக்கு நாம் காங்கிரஸ் என தெரிய வரும் என அறிவுறுத்தினார். அப்போது அமர்ந்திருந்த மகளிர் காங்கிரசார் வைத்திலிங்கம் கட்சியின் கரை போடாத வேட்டி அணிந்திருப்பதை சுட்டிக்காட்டி, நீங்கள் முதலில் கட்சி கரை வேட்டியை கட்டுங்கள். முதலமைச்சர் நாராயணசாமிதான் கட்சி கொடியுடன் கூடிய துண்டை கழுத்தில் அணிந்துள்ளார் என தெரிவித்தனர்.

உடனே வைத்திலிங்கம் இன்று மதியம் முதலே, கட்சியின் கரை வேட்டி அணிவதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பேச வந்த முதல்வர் நாராயணசாமி, காரிலிருந்து கட்சிக்கொடியின் துண்டை எடுத்து வரச்செய்து வைத்திலிங்கத்திற்கு அணிவித்தார். பின்னர் அவர் பேச தொடங்கும்போது, ஊருக்கு உபதேசம் முன்பு நாம் அதனை கடைபிடிக்கிறோமா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Congress

அடுத்த செய்தி