• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்படுவார்கள் - நடிகர் மிரட்டல் பேச்சு

சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்படுவார்கள் - நடிகர் மிரட்டல் பேச்சு

நடிகர் கொல்லம் துளசி

நடிகர் கொல்லம் துளசி

சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்படுவார்கள் என நடிகர் கொல்லம் துளசி பேசியுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்பட்டு, ஒரு பகுதி டெல்லியிலும் மற்றொரு பகுதி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலும் வீசப்படுவார்கள் என்று நடிகர் கொல்லம் துளசி பேசியுள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பின. தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.

    தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கொல்லத்தில் இன்று நடந்த போராட்டத்தில் பந்தளம் அரச குடும்பத்து உறுப்பினர்கள், பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் கொல்லம் துளசி, “சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்பட்டு, ஒரு பகுதி டெல்லியிலும் மற்றொரு பகுதி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலும் வீசப்படுவார்கள்” என பேசினார்.



    பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா, “ஐயப்பனை சீண்டியதன் விளைவை கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்தோம்” என மழை, வெள்ள பாதிப்பை குறிப்பிட்டு பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: