முகப்பு /செய்தி /இந்தியா / அனுமன்சிலை முன் பிகினி உடையில் நடந்த பெண் பாடிபில்டர்ஸ்.. பாஜக-வை கண்டிக்கும் காங்கிரஸ்

அனுமன்சிலை முன் பிகினி உடையில் நடந்த பெண் பாடிபில்டர்ஸ்.. பாஜக-வை கண்டிக்கும் காங்கிரஸ்

ஜூனியர் பாடிபில்டிங் போட்டி

ஜூனியர் பாடிபில்டிங் போட்டி

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 13 ஆவது ஜூனியர் பாடிபில்டிங் போட்டி பெரும் சர்ச்சைக்குரிய சம்பவமாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், ராட்லாம் மாவட்டத்தில் பெண்களுக்கான 13 ஆவது ஜூனியர் பாடி பில்டிங் போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியை ராட்லாம் மாநகராட்சி மேயர் பிரகலாத் படேல் ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போட்டி நடைபெறும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சைதன்ய காஷ்யப் என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

பாடி பில்டிங்  நடைபெறும் மேடையில் பிரம்மாண்ட அனுமன் சிலை வைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்துக்கொண்ட பெண் பாடிபில்டர்கள் பிகினி உடை அணிந்து போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இந்து கடவுளான அனுமன் சிலை முன் பிகினி உடையில் பெண்கள் நடந்தது அனுமனை அவமானம்படுத்துவதாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சில இந்து அமைப்பினர் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின்புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு போட்டி நடைபெற்ற இடத்தில் கங்கை தீர்த்தம் தெளிக்கப்பட்டு அனுமன் பஜனையும் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து பாஜக கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த அநாகரீகமான செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என ராட்லாம் மாநகர முன்னாள் மேயரும், காங்கிரஸ் தலைவருமான பராஸ் சக்லேச்சா கருத்து கூறியுள்ளார்.

இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டவர்கள் மீது முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னணி தலைவர் பூபேந்திர குப்தா ஆகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு அனுமன் கண்டிப்பாக தண்டனை வழங்குவார் என ராட்லாம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மயங்க் ஜாட் கூறியுள்ளார்.

பெண்கள் இது போன்ற விளையாட்டுகளில் முன்னேறுவதைக் காங்கிரஸ் விரும்பவில்லை என்பதால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகத் தனது கருத்து தெரிவித்துள்ள மாநில பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் பதற்றம் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

Also Read : திரிபுராவில் முடிந்த முதல்வர் பஞ்சாயத்து - நாளை பதவியேற்கிறார் மாணிக் சாகா

குத்துச்சண்டை, பாடி பில்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் பெண்களை மிக மோசமான கண்களோடு பார்ப்பதற்காகக் காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் பாஜ்பாய் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச முதல்வர் பிறந்த நாளை அன்று நடைபெற்ற இந்த செயலுக்கு முதலமைச்சர் சௌகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் ஊடக ஆலோசகர் பியூஸ் பாபேல் வலியுறுத்தியுள்ளதோடு, பாஜகவினர் இந்துக்களையும் இந்துக் கடவுளையும் இழிவுபடுத்தியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

First published:

Tags: BJP, Congress, Madhya pradesh