முகப்பு /செய்தி /இந்தியா / WATCH - பெண் குறித்து சர்ச்சை பேச்சு.. அரசு ஊழியரை செருப்பு, துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய உள்ளூர் பெண்கள்!

WATCH - பெண் குறித்து சர்ச்சை பேச்சு.. அரசு ஊழியரை செருப்பு, துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய உள்ளூர் பெண்கள்!

ராம்பாபுவை அடிக்கும் பெண்கள்

ராம்பாபுவை அடிக்கும் பெண்கள்

அந்த வதந்திகளால் அந்த பெண்ணின் திருமணம் தடைபட்டதால், பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை தாக்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கன்னவரம் பஞ்சாயத்து செயலகத்தில் சமூக நல உதவியாளராக பணியில் இருப்பவர் ராம்பாபு. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னார்வலராக பணியில் இருக்கும் இளம் பெண் ஒருவருக்கு வேறு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமூக நல உதவியாளர் ராம்பாபு அந்த இளம் பெண் நடவடிக்கைகள் பற்றி தவறான கருத்துக்களை வேண்டுமென்றே பரப்பி இருக்கிறார்.

 

இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைபட்டு போனது. எனவே வெகுண்டெழுந்த பெண்ணின் உறவினர்கள், அதிகாரி ராம்பாபுவை பிடித்து செருப்பு, விளக்குமாறு ஆகியவற்றால் அடித்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டனர்.

 

இது பற்றி தகவல் அறிந்த கன்னவரம் போலீசார், இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

First published:

Tags: Andhra Pradesh, Beaten up