Home /News /national /

தேசிய கொடி விற்பனையில் வீழ்ச்சி... இந்தியாவின் BSI சான்றிதழ் பெற்ற ஒரே நிறுவனத்தின் சோக நிலை

தேசிய கொடி விற்பனையில் வீழ்ச்சி... இந்தியாவின் BSI சான்றிதழ் பெற்ற ஒரே நிறுவனத்தின் சோக நிலை

கர்நாடக காதி மற்றும் கிராமோத்யோக சம்யுக்த கூட்டமைப்பு

கர்நாடக காதி மற்றும் கிராமோத்யோக சம்யுக்த கூட்டமைப்பு

பெங்கேரி கிராமத்தில் அமைந்துள்ள கர்நாடக காதி மற்றும் கிராமோத்யோக சம்யுக்த கூட்டமைப்பு அல்லது கே.கே.ஜி.எஸ்.எஸ், எனப்படும் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கர்நாடகாவின் பெங்கேரியில் உள்ள காதி யூனிட்களில் உள்ள பெண்களுக்கு, தேசியக் கொடியை நெசவு செய்வது ஒரு பணி அல்ல. ஒரு உணர்ச்சி. ஒவ்வொரு நெசவும், ஒவ்வொரு கொடியும் அன்புடனும் பெருமையுடனும் சிரத்தையுடன் செய்யப்படுகிறது.

அரசு வாகனங்கள், நமது அரசு கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் ஆகியவற்றின் மீது பறக்கும் சிறிய மூவர்ணக் கொடி முதல்,  உயிரிழக்கும் நமது வீரர்களைத் தழுவும் கொடி வரை, அவை ஒவ்வொன்றும் ஹுப்பாலியில் உள்ள பெங்கேரி கிராமத்தில் அமைந்துள்ள கர்நாடக காதி மற்றும் கிராமோத்யோக சம்யுக்த கூட்டமைப்பு அல்லது கே.கே.ஜி.எஸ்.எஸ், எனப்படும் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இதற்காக இந்தியாவில் BIS சான்றிதழைப் பெற்ற ஒரே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

கொடி தயாரிப்பு:

கொடியின் ஒவ்வொரு நிறமும் தனித்தனியாக சாயமிடப்பட்டு, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறது. அசோக சக்கரத்திற்கு, நீல நிற சின்னம் ஒரு வெள்ளை துணியில் அச்சிடப்பட்டு, மூன்று துண்டுகள் ஒன்றாக தைக்கப்பட்டு, நமது இந்தியக் கொடியை உருவாக்குகிறோம். ஒவ்வொரு கொடியிலும் நூல் எண்ணிக்கை, நிறத்தின் ஆழம், கொடியின் அளவு என்று எல்லாம் கொடி குறியீட்டின்படி இருக்க வேண்டும்.

தேசியக் கொடியை வானில் சுமந்து செல்லும் பறவை - இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

இந்தியக் கொடிக்கான விவரக்குறிப்புகளின்படி, அது செவ்வகமாகவும் 3:2 என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும்; கொடிகள் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் செய்யப்படுகின்றன. சிறியது 6×4 அங்குலம், பெரியது 21×4 அடிவரை இருக்குமாறு உருவாக்கப்படுகின்றன.

“2×3 அடி கொடியில் சக்கரத்தை அச்சிட இரண்டு பெண்கள் தேவை. ஆனால் பெரிய கொடிகளுக்கு (21×4 அடி) சக்கரம் பொறிக்கப்பட்ட பிளாக்கைப் பிடித்து வெள்ளை நிற காதி துணியில் அச்சிடுவதற்கு சுமார் எட்டு பெண்கள் தேவைப்படும். இது துல்லியமான மற்றும் கடின உழைப்பின் செயலாகும்," என்று அவர் கூறினார்.

கொடிகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் இந்தியக் கொடிச் சட்டம் 2002 இன் விதிகளின்படி அது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வீழ்ந்த விற்பனை:

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசின் ஹர் கர் திரங்கா திட்டம் பெங்கேரி பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதற்கு மாறாக அமைந்துள்ளது. இந்த முயற்சியைத் தொடங்குவதற்கு உதவுவதற்காக நரேந்திர மோடி அரசாங்கம் சமீபத்தில் கொடி வரைமுறைகளைத் திருத்தம் செய்தனர். இதனால் பெங்கேரி நிறுவனக் கொடியின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பழைய குறியீட்டின்படி, தேசியக்கொடி கதர் துணியில் தான் தயாரிக்கப்படும். ஆனால் டிசம்பர் 2021 இன் திருத்தத்தின்படி பாலிஸ்டர், பருத்தி, பட்டு மற்றும் மரப் பொருட்களைப் பயன்படுத்தி, கையால் நெய்யப்பட்ட அல்லது இயந்திரத்தாலான கொடிகளை உருவாக்கப்பட்ட கொடிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது..

இந்த ஆண்டு, பெங்கேரி யூனிட் கொடிகளுக்கு 8-10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏமாற்றமளிக்கும் வகையில் இதுவரை வெறும் 2 கோடி ரூபாய்  ஆர்டர்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

அரசு அலுவகங்களில் 'ஹலோ'க்கு பதிலாக 'வந்தே மாதரம்' பயன்படுத்த வேண்டும்... மகாராஷ்டிரா அமைச்சர்

கே.கே.ஜி.எஸ்.எஸ் இல் சுமார் 1,300 பேர் பணிபுரிகின்றனர், அவர்களில் 600 பேர் பெங்கேரி காதி தயாரிக்கும் பிரிவில் உள்ளனர், அதில்  90% பேர் பெண்கள். நெசவாளர்கள், நூற்பாலைகள் மற்றும் தையல் தொழிலாளிகளான பெரும்பாலான பெண்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

“விற்பனையில் ஏற்பட்ட சரிவு எங்கள் ஊதியத்தை பாதிக்கிறது. மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் எங்களால் தயாரிக்கப்பட்ட காதிக் கொடிகளை பெருமையுடன் பார்க்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அது தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது," என்று அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் கூறினார்.

“இந்த ஆண்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாக்களுடன் விற்பனையில் அதிகரிப்பைக் காண்போம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் தற்போது பாலியஸ்டரிலும் கொடிகளை பெருமளவில் தயாரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நம் நாட்டின் பெருமை காதி; நம் நாட்டின் மிக முக்கியமான நிகழ்வைக் குறிக்க நாம் அதைப் பயன்படுத்த வேண்டாமா?" என்று அந்த நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் அனுராதா வருத்தத்துடன் தெரிவித்தார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Independence day, Karnataka

அடுத்த செய்தி