மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு ஊசி நூலால் தையல் போட்ட ‘சந்தேக பேர்வழி’ கணவர்!

representative image

மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு தையல் போட்டு கணவர் வெறிச்செயல்

  • Share this:
மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருந்து வந்த கணவன், தனது மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசி நூலால் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் தனது கணவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு அவரது மனைவி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கணவர் - மனைவி இருவருக்குமிடையேயான சண்டை சச்சரவுகள் என்பது தொடர்கதையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நேரங்களில் இந்த விவகாரங்கள் எல்லை மீறி செல்வதுண்டு. சில நாட்கள் முன் ‘சிக்கன் பிரை’ சமைத்துத் தரவில்லை என்ற ஆத்திரத்தில் மனைவி ஒருவரை கணவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறியது, இதைத் தொடர்ந்து தற்போது மனைவி மீதான சந்தேகத்தில் அவருடைய அந்தரங்க உறுப்புக்கே தையல் போட்டிருக்கிறார் 65 வயதான ‘சந்தேக பேர்வழி’ கணவர் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், தனக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருந்து வந்த தனது 64 வயது கணவர், ஊசி நூலால் தனது அந்தரங்க உறுப்பை தைத்து விட்டதாக பெண் போலீஸ் ஒருவரை அணுகி புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து அவருடைய அந்தரங்க உறுப்பில் தையல் போட்ட ஊசியும், நூலும் நீக்கப்பட்டது..

பொதுவாக மருத்துவத்துக்கு பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் அப்பெண்ணுக்கு தையல் போட்டதாகவும், இதன் காரணமாக அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்ணை துன்புறுத்தியதாக சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் அப்பெண்ணின் கணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Also Read:  பெண்ணின் அலரல் சத்தத்தால் பதறிய பகுதிவாசிகள் – 4 பேர் செய்த கொடூரம்!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நாங்கள் வசித்து வரும் கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக எனது கணவர் சந்தேகம் கொண்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வரும். அடிக்கவும் செய்வார். ஆனால் தற்போது ஒரு படி மேல் சென்று எனது அந்தரங்க உறுப்புக்கு கணவர்  தையல்  போட்டுவிட்டார்.  அவர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவரது மனைவி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 28 வயதான தனது மனைவி சிக்கன் பிரை சமைத்துத் தராத ஆத்திரத்தில் அவரின் தலையை கட்டையால் அடித்துக் கொலை செய்து உடலை ஏரியில் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: