சகோதரனை காப்பாற்ற சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்: நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சகோதரனை காப்பாற்ற சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்: நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

டெல்லி

தன்னுடைய சகோதரனிடம் காரில் வந்த 3 பேர் பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு வந்த போது அந்த 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்தார்.

  • Share this:
சகோதரனிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்க சென்ற போது 25 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மூன்று முதல் 4 பேர் கொண்ட கும்பல், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவருடைய ஆடைகளை கிழித்துவிட்டதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர்.

அப்போது, தன்னுடைய சகோதரனிடம் காரில் வந்த 3 பேர் பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு வந்த போது அந்த 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபாதேபுர் பேரி காவல்நிலையத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து காவல்துறைக்கு வந்த மற்றொரு தொலைபேசி அழைப்பில் அய நகர் பகுதியில் 3 பேர் தன்னை தாக்கி, தன்னிடம் இருந்து 30,000 ரூபாய் பறித்துச் சென்றதாக ஒருவர் கூறினார்.

சம்பவ இடத்துக்கு காவலர்கள் சென்ற போது ஷாஜத் (வயது 30) என்ற ட்ரக் ஓட்டுநர் போலீசாரிடம், நானும், சக தொழிலாளிகளிடம் லாரியில் இருந்து செங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கு வந்த 3 பேர் எங்களிடம் தகராறு செய்ததுடன் எங்களை தாக்கினர். பின்னர் என்னிடம் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். அதில் 30,000 ரூபாய் பணமும், சில ஆவணங்களும் இருந்ததாக அவர் கூறினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல்துறை ஆணையர் அதுல் குமார் கூறுகையில் இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பல் தான் என தெரியவந்தது. வெள்ளிக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் பதுக்கியிருந்த அய நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 26), நவீன் லஹ்மோத் (வயது 25) மற்றும் பல்ஜீத் (வயது 30) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5200 ரூபாய் பணமும், கார் ஒன்றும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 
Published by:Arun
First published: