• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 16 பேருடன் டேட்டிங்... நகை, பணம் சுருட்டல்... : கில்லாடி பெண் கைது

16 பேருடன் டேட்டிங்... நகை, பணம் சுருட்டல்... : கில்லாடி பெண் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புனேவில் 16 பேருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு நகை, பணத்தை சுருட்டிய கில்லாடி இளம்பெண்ணை புனே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
புனேவைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர், டேட்டிங் செயலி மூலம் ஆண்களை வளைத்து, அவர்களுடன் தங்கி நகை, விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை சுருட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அந்த பெண்ணிடம் ஏமாந்த 4 பேர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அந்த பெண்ணை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்ததால், அந்த பெண்ணின் ரூட்டையே காவல்துறையினர் கையில் எடுத்தனர்.

அதாவது, எந்த டேட்டிங் ஆப் மூலம் பல ஆண்களை ஏமாற்றி, அந்த பெண் சித்து விளையாட்டில் ஈடுபட்டாரோ? அதே டேட்டிங் ஆப் மூலம் போலியான புரொபைல் ஒன்றை உருவாக்கி, அந்த பெண்ணை தொடர்பு கொண்டனர். காவல்துறையினர் வைத்த பொறியில் தற்போது அந்த பெண் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் புனேவில் உள்ள ராதிகா அப்பார்ட்மென்டில் வசித்து வரும் 27 வயதான சயாலி அலியாஷ் தேவேந்திர காலே (Sayali alias Shikha Devendra Kale) என்பது தெரியவந்தது. நன்கு படித்த குடும்பத்தை பின்னணியாக கொண்ட அந்தப் பெண், ஆண்களை ஏமாற்றி விலையுயர்ந்த செல்போன், நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த பெண்ணின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு காலமாகியுள்ளார். கடந்த ஆண்டு வரை ஐ.டி கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ள சயாலி, கொரோனா காரணமாக பணியை இழந்துள்ளார்.

சயாலியின் தாய் உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்ட சயாலி, டேட்டிங் ஆப் மூலம் பணக்கார ஆண்களை தன் வலையில் வீழ்த்துவதை குறிக்கோளாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு சிக்கும் ஆண்களுடன் தனியாக அறையில் தங்கும் அவர், தான் எடுத்துச்செல்லும் தூக்க மாத்திரைகளை மதுபானங்களில் கலக்கி டேட்டிங் வருபவர்களை மயக்கமடைய செய்துள்ளார்.

பின்னர், அவர்களிடம் இருக்கும் விலையுயர்ந்த செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துகொண்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவ்வாறு சென்ற பிறகு அவர்களுடன் பேசிய கால் அழைப்புகள், மெசேஜ் உள்ளிட்டவற்றை உடனடியாக தன்னுடைய செல்போன்களில் இருந்து சயாலி அழித்துவிடுவார்.

மேலும் படிக்க...விவசாய பயிர் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஒருமுறை திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருக்கும் அடகுகடைக்கு சென்ற சயாலி, அந்த கடை உரிமையாளரிடம், தன்னுடைய அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்றும், புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சைக்கு பணம் தேவைபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணை மூலம் சயாலியின் சித்து விளையாட்டை தெரிந்து கொண்ட காவல்துறையினருக்கு, அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியாக இருந்ததுள்ளது. மேலும், சயாலியிடம் இருந்து 15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய புனே காவல்துறை, IPC 328, 379 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: