ஹோம் /நியூஸ் /இந்தியா /

பைக்கில் ரைட் வர மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கிய நபர்...அதிர்ச்சி வீடியோ...!

பைக்கில் ரைட் வர மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கிய நபர்...அதிர்ச்சி வீடியோ...!

மதுபோதையில் பெண்ணை தாக்கிய நபர்

மதுபோதையில் பெண்ணை தாக்கிய நபர்

தன்னுடன் பைக்கில் வர மறுத்ததால் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கி அடித்த நபர் கைது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிக்கும் ஒரு பெண் தனது வீட்டிற்கு ஆட்டோ ரிக்ஷா மூலம் வந்துள்ளார். தனது வீட்டின் தெருவோரம் வந்து ஆட்டோவில் இறங்கிய அந்த பெண் வீட்டை நோக்கி செல்ல தொடங்கினார். அப்போது பைக்கில் வந்த ஒரு நபர், அந்த பெண்ணின் அருகே சென்று சில நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் அடிக்கத் தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநரும் தெருவில் சென்ற சிலரும் அந்த பெண்ணை தாக்குதலில் இருந்து காப்பாற்றினர்.  காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவில் பதிவான நிலையில் தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் கமல் என்றும், அவர் அந்த பெண்ணின் அண்டை வீட்டுக்காரர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது போதையில் இருந்த கமல் பெண்ணை தனது பைக்கில் ஏறி பயணம் செய்யும் படி வற்புறுத்தியுள்ளார்.

அந்த மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து கமல் வற்புறுத்தினார். ஆனால், பெண் அதை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் இந்த தாக்குதலை கமல் நடத்தியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Attack on Women, Haryana, Viral Video, Woman