விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்ட மாணவியை ரயிலை நிறுத்தி நடை மேடையை உடைத்து காவலர்கள் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் வந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார்.
Also see... ''வக்காலத்து வாங்கினேன்.. பாவமன்னிப்பு கேட்கிறேன்'' - அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் பரபர பேச்சு
இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Passengers injured, Student, Train, Visakhapatnam S01p04