கடனைத் திரும்பி தராத பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்த கொடூரம்! வீடியோவால் ஏழு பேர் கைது

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்தச் சம்பவத்துக்கு காரணமான ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: June 15, 2019, 7:41 PM IST
கடனைத் திரும்பி தராத பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்த கொடூரம்! வீடியோவால் ஏழு பேர் கைது
பெண் மீது தாக்குதல்
Web Desk | news18
Updated: June 15, 2019, 7:41 PM IST
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாத பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கோடிகேஹலி பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவரை, கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்று கூறி பொதுவெளியில் பகல் நேரத்தில் மின் கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்து சென்றுள்ளனர். அந்தப் பகுதியாக வந்த ஒருவர் இதனைப் பார்த்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்தச் சம்பவத்துக்கு காரணமான ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் சகோதரர், பெண் ஒருவர் அவரிடம் வாங்கிய கடனைத் திரும்பத் தரவில்லை என்று அந்தப் பெண்ணை ரோட்டுக்கு இழுத்து வந்து நான்கு, ஐந்து பேருடன் சேர்ந்து பெண்ணை கடுமையாக தாக்குகிறார். பெண்ணின் வயிற்றில் எட்டி உதைக்கின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானநிலையில், இதுதொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also see:

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...