மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை கூறியதாவது, " உத்தரப் பிரதேசத்தின் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் மத்தியப் பிரதேச மாநிலம் கஜ்ராஹோவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா வரை செல்லும் பயணிகள் ரயிலில் ஏப்ரல் 27ஆம் தேதி பயணம் செய்துள்ளார்.
இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தார்பூருக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு தனது சொந்த ஊரான பந்தாவுக்கு திரும்பியுள்ளார். ரயில் ஊர் திரும்பும் போது அருகே இருந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவரை பாலியில் சீண்டளுக்கு ஆளாக்கியுள்ளார். இந்த இளம்பெண் அவரை தடுக்க முயன்றாலும், அவர் வீடாமல் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
அவரை தாக்கிவிட்டு தப்பிக்க இளம் பெண் முயற்சி செய்த நிலையில், அந்த நபர் ஆத்திரத்தில் ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளியுள்ளார். இவர் கஜ்ரஹோ அருகே உள்ள ராஜ்நகர் என்ற பகுதியில் விழுந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க:
வரதட்சணைக்காக மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்த கணவன்
தற்போது அந்த இளம் பெண் சத்தார்பூர் மாவட்ட மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.