Home /News /national /

தள்ளுவண்டியில் இருந்த பழங்களை சாலையில் வீசியெறிந்த பெண்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தள்ளுவண்டியில் இருந்த பழங்களை சாலையில் வீசியெறிந்த பெண்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பழங்களை சாலையில் வீசியெறிந்த பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு ட்விட்டர் பயனாளர், அப்பெண் தனது காரை வீட்டிலேயே வைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

    தள்ளுவண்டியில் இருந்த பழங்களை பெண் ஒருவர் சாலையில் வீசியெறிவது போன்ற வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சமூக ஊடகத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று  வெளியாகி வைரலாகியது. அதில், தள்ளுவண்டியில் இருந்து பழங்களை பெண் ஒருவர் சாலைகளில் வீசி எறியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்பெண்ணின் செயலுக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

    இதையடுத்து, பலரும் பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இந்த வீடியோ குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அயோத்தியா நகரில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. சாலையில் பழங்களை வீசியெறிந்த பெண் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ஓட்டிவந்த காரில்  தள்ளுவண்டி உரசியதாகவும் இதில் காரில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



    இதில் ஆத்திரமடைந்த அப்பெண், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பழங்களையும் சாலையில் வீசி எறிந்துள்ளார். அப்பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு ட்விட்டர் பயனாளர், அப்பெண் தனது காரை வீட்டிலேயே வைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இன்றி ரேஷன் பொருள் வழுங்குக - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Social media, Viral Video

    அடுத்த செய்தி