அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த இளைஞர்

அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த இளைஞர்
எரித்துக் கொலை செய்யப்பட்ட விஜயா ரெட்டி
  • News18
  • Last Updated: November 4, 2019, 4:22 PM IST
  • Share this:
தெலங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் அப்துல்லாபூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாராக பணியில் இருந்தவர் விஜயா ரெட்டி.

கடந்த சில நாட்களாக நிலம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்றும் அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் விஜயா ரெட்டியுடன் அவருடைய அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார்.


இரண்டு பேருக்கும் இடையே என்ன நடைபெற்றது என்று தெரியாத நிலையில் தாசில்தார் அறைக்குள் இருந்து திடீரென்று ஐயோ அம்மா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற தாசில்தாரின் அபயக் குரல் கேட்டது.
அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் ஓடிச்சென்று தாசில்தார் அறை கதவை திறந்து பார்த்த போது விஜயா ரெட்டி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தார்.
அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் மீதும் தீப்பற்றியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

Loading...

ஊழியர்கள் இரண்டு பேரும் தாசில்தார் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து அலுவலகத்திலேயே துடிதுடித்து தாசில்தார் பரிதாபமாக மரணமடைந்தார்.

இந்த நிலையில் தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை வாலிபர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

தாசில்தாரை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவத்திற்காக அவரை கைது செய்துள்ள போலீசார், தாசில்தார் விஜயா ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கா ரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

இச்சம்பவம் அருகிலிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வீடியோ பார்க்க: திருவள்ளுவருக்கு காவி உடை... சர்ச்சையை ஏற்படுத்திய தமிழக பாஜக...!

First published: November 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...