Home /News /national /

பட்டப்பகலில் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்

பட்டப்பகலில் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்

அண்டை வீட்டு நபர் ஒருவர் அப்பெண்ணை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பின்தொடர்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அண்டை வீட்டு நபர் ஒருவர் அப்பெண்ணை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பின்தொடர்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அண்டை வீட்டு நபர் ஒருவர் அப்பெண்ணை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பின்தொடர்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

 

திருமணமான பெண்ணை நபர் ஒருவர்  பட்டப்பகலில் பின்தொடர்ந்து சென்று கத்தியால் தாக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் ஹபீஸ் பாபா நகரில் உள்ள பரபரப்பான சாலையில் புர்கா அணிந்த பெண்ணை நபர் ஒரு பின்தொர்ந்து சென்று கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். 48 வயதுடைய அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

புர்கா அணிந்த பெண்ணை நபர் ஒருவர் துரத்திச் செல்வதையும், தான் வைத்திருந்த நீண்ட கத்தியை கொண்டு பின்னால் இருந்து தாக்குவதையும் காண முடிகிறது. நொடிபொழுதில் அப்பெண் நிலைகுலைந்த பிறகும், நிற்காமல் அவரைத் தொடர்ந்து கத்தியால் குத்திய பதற வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வழியாகச் சென்றவர்களில் ஒருவர் நபரின் அருகில் செல்ல முயன்றபோது, ​​தாக்குதல் நடத்தியவர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பின்வாங்கச் செய்தார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கஞ்சன்பாக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு ஆறு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனது அண்டை வீட்டு நபர் ஒருவர் அவரை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், அடிக்கடி பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Archana R
First published:

Tags: Crime News, Hyderabad

அடுத்த செய்தி