• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திடீரென தாக்கிய சிறுத்தை - சிங்கிளாக ஹேண்டில் செய்து உயிர்பிழைத்த பெண்!

திடீரென தாக்கிய சிறுத்தை - சிங்கிளாக ஹேண்டில் செய்து உயிர்பிழைத்த பெண்!

மாதிரி படம்

மாதிரி படம்

மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி  (Jalpaiguri ) மாவட்டத்தில், டீ எஸ்டேட்டில் வேலை செய்த பெண் ஒருவரை, அங்கிருந்த புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென தாக்கியிருக்கிறது. தன்னிடம் தடி, கம்பு எதுவும் இல்லாதபோதும், அந்தப்பெண் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிறுத்தையுடன் போராடி மீண்டுவந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மேற்குவங்கத்தில் டீ எஸ்டேட்டில் வேலை செய்த பெண் ஒருவர், தன்னை தாக்கிய சிறுத்தையிடம் தனிஒருவராக போராடி உயிர்பிழைத்துள்ளார்.

உயிர்போகும் ஆபத்தான சூழலில் தனி ஒருவராக போராடி, தப்பிப்பிழைக்கும் காட்சிகளை திரைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம். அப்படியான, ஒரு நிகழ்வு நிஜவாழ்க்கையிலும் நடந்து, அதனை நாம் கேள்விப்படும்போது உண்மையிலேயே புல்லரிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் திடீரென ஒரு சிறுத்தை வந்து உங்களை தாக்கியது என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? கற்பனை செய்துபாருங்கள். நினைக்கும்போதே உடம்பு மெய்சிலிர்க்கும்.

மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி  (Jalpaiguri ) மாவட்டத்தில், டீ எஸ்டேட்டில் வேலை செய்த பெண் ஒருவரை, அங்கிருந்த புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென தாக்கியிருக்கிறது. தன்னிடம் தடி, கம்பு எதுவும் இல்லாதபோதும், அந்தப்பெண் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிறுத்தையுடன் போராடி மீண்டுவந்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், லீலா ஓரன் (Leela Oraon) என்ற பெண் பாத்ஹவா (Bhatkhawa) டீ எஸ்டேட்டில் வேலை செய்துள்ளார். அப்போது, அங்கிருந்த சிறுத்தை அந்தப் பெண்ணை தாக்கியுள்ளது. சிறுத்தையுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அந்தப் போராடியுள்ளார். 

இதனையடுத்து அவர் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து, காயமடைந்த அந்தப்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லில்லாபாரி கிராமீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆபத்தான சூழல் எதுவும் இல்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Also read... Gold Rate | தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

சிறுத்தையிடம் தனி ஒருவராக போராடி உயிர் பிழைத்துள்ள அந்தப் பெண்ணின் தைரியமும், வீரமும் உண்மையில் பாராட்டத்தக்கது என அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சந்தீபன் சர்கார் (Dr Sandipan Sarkar) தெரிவித்துள்ளார். வனப்பகுதி நிறைந்துள்ள ஜல்பய்குரி மாவட்டத்தில் (Jalpaiguri) மனிதர்களை சிறுத்தை தாக்குவது இது முதன் முறையல்ல என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோதல்கள் ஏற்கனவே நடத்துள்ளதாகவும், அண்மையில் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே ஒரு மோதல் நடைபெற்றதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் கூறினர். 

வனத்துறை வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று 2 சிறுத்தைகள் மீது மோதியதாகவும், இதில் சிறுத்தைகள் மற்றும் காரில் பயணித்தவர்கள் ஐந்து பேரும் காயமடைந்ததாக தெரிவித்தனர். ஒரு சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மற்றொரு சிறுத்தை தப்பியோடிவிட்டதாக அவர்கள் கூறினர். சிலுகிரி (Siliguri) மாவட்டத்தில், கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றை கிராம மக்கள் அடித்து கொன்றுவிட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இயல்பாகவே அதிகம் இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். மேற்குவங்கம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு, காடுகள் அழிப்பு, மனித நடமாட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சூழலியல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: