பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் எஸ்.ஐ கைது

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் எஸ்.ஐ கைது
மாதிரி படம்
  • Share this:
குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் வழக்கை விசாரிக்காமல் இருக்க 20 லட்ச ரூபாய் லட்ச வாங்கியதாக பெண் எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் மேற்கு அகமதாபாத்தின் மகளிர் காவல்நிலையத்தில் பொறுப்பாளராக இருந்துவருகிறார் எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா. 2019-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் கேனல்ஷா என்பவரின் சகோதரரிடம் 35 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஸ்வேதா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கேனல்ஷா மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக பணம் கேட்டுள்ளார் என்று அவர்மீது சமூக எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்துள்ள முதல்தகவல் அறிக்கையின்படி, எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா 20 லட்ச ரூபாயை வாங்குவதற்கு தரகர் மூலமாக ஒப்புக்கொண்டார். மேலும் கூடுதலாக 35 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் பிப்ரவரி மாதத்தில் 20 லட்ச ரூபாய் ஸ்வேதாவிடம் கொடுத்துள்ளார். மீதப்பணத்தையும் விரைவில் தரவேண்டும் என்று ஸ்வேதா வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading