மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து உயிரிழப்பு!

மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து பலி; வரதட்சனை கொடுமை என தந்தை வழக்கு!

துப்பாக்கியை வைத்து செல்பி எடுத்தபோது, தவறுதலாக டிரிக்கரில் விரல் பட்டதில் அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

 • Share this:
  மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது புதுப்பெண் ராதிகா குப்தா தனது மாமனாரின் ஒற்றைக் குழல் துப்பாக்கியை வைத்து செல்பி எடுத்தபோது, தவறுதலாக டிரிக்கரில் விரல் பட்டதில் அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக அந்த பெண்ணின் மாமனார் ராஜேஷ் குப்தா கூறும்போது, எனது மகன் ஆகாஷ் குப்தாவுக்கும், ராதிகாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஊரில் ஒரு சிறிய நகைக்கடை உள்ளது. சம்பவம் நடந்த அன்று, எனது மகன் பஞ்சாயத்து தேர்தலுக்காக உள்ளூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருந்த, எங்களது துப்பாக்கியை மாலை 3 மணி அளவில் வாங்கி வந்தார்.

  Also read: கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கால் இதுவரை 6 பேர் உயிரிழப்பு!

  இதைத்தொடர்ந்து, 4 மணி அளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது உடனடியாக சென்று பார்த்தபோது, ராதிகா குண்டு காயத்துடன் ரத்த வெள்ளமாக கிடந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  போனை கைப்பற்றிய போது அது சுவிட்ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. தொடர்ந்து, போனில் இருந்து அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் கண்டெடுத்துள்ளோம். தொடர்ந்து, அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு தடயவியல் நிபுணர்கள் உதவியை நாடியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பெண்ணின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட மரணம் என புகார் அளித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: