• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இளைஞருடன் பயணித்த பெண்ணை கட்டாயப்படுத்தி புர்காவை கழற்ற வைத்த வைரல் வீடியோ!

இளைஞருடன் பயணித்த பெண்ணை கட்டாயப்படுத்தி புர்காவை கழற்ற வைத்த வைரல் வீடியோ!

viral video

viral video

அப்பெண் புர்க்காவை கழற்றியபின்னர், இனி இது போல செய்யக்கூடாது என அவர்கள் அறிவுறுத்தினர்.

  • Share this:
    இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் அணிந்திருந்த புர்காவை சிலர், கட்டாயப்படுத்தி கழற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேயிருக்கும் இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்ட, அவருக்கு பின்சீட்டில் இளம் பெண் ஒருவரும் அமர்ந்தபடி பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர் சிறிய தெரு ஒன்றில் வந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த சிலர், இவர்கள் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பின்சீட்டில் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த புர்க்காவை கழற்றுமாறு கூறினர். மேலும் புர்க்காவை கழற்றிவிட்டு உன் முகத்தை காட்டு என அவர்கள் கூறியிருக்கின்றனர்.



    ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் இந்து எனவும் பின்னால் அமர்ந்திருந்த பெண் முஸ்லிம் எனவும் அவர்கள் நினைத்ததால், அந்த பெண்ணின் புர்க்காவை கழற்றிவிட்டு தொடர்ந்து செல்லுமாறு கூறினர். மேலும் இச்சம்பவத்தை அவர்கள் வீடியோவாக எடுத்தனர். பின்னர் அப்பெண் புர்க்காவை கழற்றியபின்னர், இனி இது போல செய்யக்கூடாது என அவர்கள் அறிவுறுத்தினர்.

    Also Read: வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது, இருப்பினும் இது குறித்து போலீசாருக்கு எந்தவித புகாரும் வராததால் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    புர்க்காவை கழற்றச் செய்ததன் மூலம் தனிமனித சுதந்திரத்தை அவர்கள் பறித்துவிட்டனர் எனவும் இது போன்ற செயல்கள் மனித நாகரீகமற்றது என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: