பணி முடித்து வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்சி ஓட்டுநர்

பணி முடித்து வீடு திரும்பிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கால்டாக்சி ஓட்டுநர்!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து பணி முடித்து வீடு திரும்பும் போது, கால்டாக்சி ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மெஹ்ராலி-குர்கான் சாலையில் உள்ள ஒரு முக்கிய மாலில் முன்னணி ஆடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்த பெண் வழக்கம்போல், இரவு 8 மணிக்கு தனது பணியை முடித்து பேருந்து நிலையம் வந்த அவர் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த கால்டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் டெல்லி செல்வதாகவும், அவரை வீட்டில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.

  இதனை நம்பிய அந்த பெண், காரில் ஏறியுள்ளார். அப்போது, காரின் பின்பக்க இருக்கையில் அமர வேண்டாம், வேறு பயணிகளை ஏற்ற வேண்டும் முன்பக்க இருக்கையில் அமரும் படியும் கூறியுள்ளார். தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய ஓட்டுநர் அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

  Also read: 13 மாதத்தில் 3வது முறையாக கொரோனா தொற்று - மும்பை மருத்துவருக்கு வந்த சோதனை

  இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளார். எனினும், அவரது கைப்பை, செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் ஓட்டுநர் அவரிடம் இருந்து பிடுங்கி கொண்டு, காரிலேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  அதன் பின்னர் வண்டியை எடுத்த அவர், டெல்லி எல்லை பகுதியில் நிறுத்தி, அந்த பெண்ணை இறக்கி விட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணின் உடமைகள், செல்போன் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூற கூடாது என மிரட்டியும் சென்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் குர்கானில் உள்ள டிஎல்எஃப் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கால்டாக்சி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
  Published by:Esakki Raja
  First published: