ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியை மூன்றாவது மாடியில் இருந்து தள்ளி கொலை… உடலை கையோடு தூக்கிக்கொண்டு தப்பித்த காதலனை தேடிப் பிடித்த போலீஸ்!

காதலியை மூன்றாவது மாடியில் இருந்து தள்ளி கொலை… உடலை கையோடு தூக்கிக்கொண்டு தப்பித்த காதலனை தேடிப் பிடித்த போலீஸ்!

போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக பணியில் இருந்தபோது காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக பணியில் இருந்தபோது காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக பணியில் இருந்தபோது காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நொய்டாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 22 வயது பெண் ஊழியர் ஒருவர் அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து அவரது முன்னாள் காதலனால் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 08) மாலை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், இறந்த பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு காஜியாபாத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார். இறுதியில், அங்கிருந்து மீரட் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தபோது போலீசார் அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக பணியில் இருந்தபோது காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. ஆனால், சமீபத்தில் அந்தப் பெண் தனது காதலனிடம் இருந்து பிரச்சனை காரணமாக விலகியதாகவும், அதே நேரத்தில் அந்த நபர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

  நொய்டா கூடுதல் துணை காவல் ஆணையர் அசுதோஷ் திவேதி கூறுகையில், செவ்வாய்கிழமை மாலை ஒரு பெண் அலுவலக கட்டிடத்தில் இருந்து விழுந்தது குறித்து செக்டார் 49 காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கௌரவ் என்ற அந்த நபர், தான் இறந்த பெண்ணின் சகோதரர் என்று மருத்துவமனையில் கூறி அவரது சடலத்தை பெற்று சென்றுள்ளார். பின்னர் விசாரணையில், அவர் அந்தப் பெண்ணின் சகோதரர் அல்ல, முன்னாள் காதலன் என்பது கண்டறியப்பட்டது.

  மேலும், அப்பெண் தனது முன்னாள் காதலனால் அடிக்கடி தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் அதனால் அந்தப் பெண் செப்டம்பர் மாதத்தில் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, தான் இனி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யப்போவதில்லை என எழுத்துப்பூர்வமாக கெளரவ் தெரிவித்ததாகவும் திவேதி கூறியுள்ளார்.

  இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும் மின்னணு கண்காணிப்பு மூலம் அவர் கண்காணிக்கப்பட்டு மீரட் போலீசார் உதவியுடன் அந்த நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின் அந்த நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  Published by:Archana R
  First published:

  Tags: Crime News, Noida