ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பார்சலில் வந்த அதிர்ச்சி.!

ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பார்சலில் வந்த அதிர்ச்சி.!

டெலிவரி செய்யப்பட்ட பார்சல்.!

டெலிவரி செய்யப்பட்ட பார்சல்.!

வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ஓப்பன் பாக்ஸ் டெலிவரி என்ற அம்சத்தை ஃபிளிப்கார்ட் செயல்படுத்தி வருகிறது. இது பல வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

பண்டிகைக் காலங்கள் வந்து விட்டால், தெருவோர வியாபாரிகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் என அனைவருமே வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும், டிஸ்கவுண்ட்களையும் கொடுக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களும் நிறைய பொருட்களை ஆர்வமுடன் வாங்குவது வழக்கம். குறிப்பாக, ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் நாம் கேட்ட அதே பொருள், நல்ல தரத்துடன் வந்து சேருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஒன்றிரண்டு சந்தர்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஆன்லைனில் டிரோன் கேமரா ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கைக்கு பொம்மை (டாய்) கேமரா வந்து சேரும். சில நேரம் நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருள் வந்து சேரும். தற்போதைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்த பெண்ணுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்ற பெண், ரூ.1,304 மதிப்புள்ள வாட்ச் ஒன்றை கடந்த மாதம் 28ஆம் தேதி ஆர்டர் செய்தார்.

இந்த ஆர்டருக்கு நேரில் பணம் செலுத்தும் வசதியை அவர் தேர்வு செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நீலம் யாதவுக்கு பார்சல் வந்து சேர்ந்தது. அந்த பார்சலை நீலம் யாதவின் சகோதரர் ரவீந்திரா திறந்து பார்த்தார். கைக்கடிகாரம் எப்படி இருக்கும் என்ற ஆவலோடு பார்சலை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாட்சுக்கு பதிலாக 4 மாட்டுச்சாண கேக்குகள் வந்திருந்தன. இதைத் தொடர்ந்து, டெலிவரி செய்த ஊழியரை ரவீந்திரா தேடிப் பிடித்தார். இதையடுத்து அந்த ஊழியர் பணத்தை திருப்பிக் கொடுத்ததோடு, தவறுதலாக டெலிவரி செய்யப்பட்ட பொருட்களை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

Also Read : Girls ஆன்லைன் ஆர்டர் Expectation... ஆனால் Reality... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

ஓப்பன் பாக்ஸ் டெலிவரி

வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ஓப்பன் பாக்ஸ் டெலிவரி என்ற அம்சத்தை ஃபிளிப்கார்ட் செயல்படுத்தி வருகிறது. இது பல வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. இந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், டெலிவரி ஊழியர் உங்களை நேரில் சந்திக்கின்றபோது உங்கள் ஃபோனுக்கு ஒரு ஓடிபி நம்பர் வரும்.

அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த ஊழியர் பார்சலை பிரித்து காண்பிப்பார். நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருள் வந்திருந்தால் அந்த இடத்திலேயே அதை ரிட்டன் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஃபிளிப்கார்டும் அதை உறுதி செய்து உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Flipkart, Online