Home /News /national /

வருங்கால கணவருடன் தனிமையில் சந்திப்பு.. செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வருங்கால கணவருடன் தனிமையில் சந்திப்பு.. செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

உள்ளூரைச் சேர்ந்த குற்றவாளிகள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    விஜயவாடா பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் கடந்த 19-ம் தேதி சீதாநகரம் பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இரவு நேரத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இவர்களை மிரட்டியுள்ளனர். திடீரென அந்தக் கும்பல் செலிவியரின் வருங்கால கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். செவிலியர் கூச்சலிட்டும் இரவு நேரம் என்பதால் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை.

    Also Read: PUBG MADAN: நியூஸ் 18 செய்தி எதிரொலி ஆபாச யூடியூபர் மதன் யூடியூப் சேனல் முடக்கம்

    செவிலியரின் வருங்கால கணவரை தாக்கி கட்டிப்போட்ட கும்பல் அதன்பின் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்ட அந்த கும்பல் படகு மூலம் கிருஷ்ணா நதியில் தப்பிச்சென்றுவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தப்பெண்ணின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உள்ளூரைச் சேர்ந்த குற்றவாளிகள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த பிளேட் பேட்ச் என்ற கும்பலின் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் பிளேட்டை கொண்டு பொதுமக்களை தாக்கி அவர்களின் உடைமைகளை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குண்டூர் போலீஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Andhra Pradesh, Crime | குற்றச் செய்திகள், Nurse, Police arrested, Sexual abuse, Sexual harassment

    அடுத்த செய்தி