ஷேவிங் பிளேடை பயன்படுத்தி 8ம் வகுப்பு கூட படிக்காதவர் பார்த்த பிரசவம்: ரத்தம் வெளியேறி தாய் - குழந்தை உயிரிழப்பு!

ஷேவிங் பிளேடை பயன்படுத்தி 8ம் வகுப்பு கூட படிக்காதவர் பார்த்த பிரசவம்: ரத்தம் வெளியேறி தாய் - குழந்தை உயிரிழப்பு!

ஷேவிங் பிளேடை பயன்படுத்தி 8ம் வகுப்பு கூட படிக்காதவர் பார்த்த பிரசவம்

ராஜேஸ் சைனி தனது மருத்துவனையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக 8ம் வகுப்பை பாதியில் கைவிட்ட ராஜேந்திர சுக்லா என்பவரை பணியமர்த்தியது தெரியவந்தது.

  • Share this:
8ம் வகுப்பு கூட படிக்காத இளைஞர் ஒருவர் ஷேவிங் பிளேடை பயன்படுத்தி சிசேரியன் வழி பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் ரத்தப் போக்கால் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சைனி கிராமத்தில் உள்ள மா சாரதா மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் ரத்தப் போக்கு ஏற்பட்டு தாயும், பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தனது மனைவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் கவனக்குறைவாகவும், அலட்சியாகவும் பிரசவம் பார்க்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனை மற்றும் அதன் தலைவர் ராஜேஸ் சைனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய கணவர் ராஜாராம் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் செயல்பட்ட காவல்துறையினர் மேற்கண்ட மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஸ் சைனி தனது மருத்துவனையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக 8ம் வகுப்பை பாதியில் கைவிட்ட ராஜேந்திர சுக்லா என்பவரை பணியமர்த்தியது தெரியவந்தது. புகார்தாரர் கூறியபடி அவருடைய மனைவிக்கு ராஜேந்திர சுக்லா தான் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகவும், அந்த அறுவை சிகிச்சைக்காக அவர் ஷேவிங் செய்ய பயன்படுத்தும் பிளேடை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இது காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜேஸ் சுக்லா மற்றும் ராஜேஸ் சைனி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுல்தான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி கூறுகையில், அந்த கிளினிக் அரசின் பதிவு பெறாதது என்றும், அங்கு ஷேவிங் பிளேடுகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சைகள் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ தினத்தின் போது அப்பெண்ணுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்படவே பயந்து போன இருவரும் , அப்பெண்ணின் கணவர் ராஜாராமிடம் சென்று உடனடியாக அவரின் மனைவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கோரியுள்ளனர். வழியில் அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் தனது மனைவியின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்ததுடன் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். இருப்பினும் அதிகப்படியான ரத்தப் போக்கால் அவரும், பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
Published by:Arun
First published: