• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எம்.எஸ்.சி படித்துவிட்டு துப்புரவு பணியாளர் பணி: உதவிக்கரம் நீட்டிய அரசு!

எம்.எஸ்.சி படித்துவிட்டு துப்புரவு பணியாளர் பணி: உதவிக்கரம் நீட்டிய அரசு!

ரஜனி

ரஜனி

கணவர் இதய பிரச்சனை காரணமாக படுக்கையில் விழுந்தார். குழந்தைகள், கணவர், மாமியார் என அனைவரையும் கவனிக்க வேண்டிய சுமை ரஜனியின் தோளில் விழுந்தது

  • Share this:
    எம்.எஸ்.சி. படித்துவிட்டு ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கு  அவரது படிப்பிற்கு ஏற்க பணியை வழங்கி தெலங்கானா அரசு உதவியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரஜனி. விவசாய கூலிக்கு மகளாக பிறந்த ரஜனி தங்கள் குடும்பத்தை நிதி பற்றாக்குறைக்கு இடையேயும் நன்றாக படித்து கரிம வேதியியலில் எம்எஸ்சி (MSc in organic chemistry) பட்டம் பெற்றார்.  ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பயிலவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    எனினும், அதற்குள் திருமணமாக அவர் ஐதராபாத் நகருக்கு இடம்பெயர்ந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் போட்டித்தேர்வுகளுக்கு அவர் தயாராகி வந்தார்.  இந்நிலையில்தான் அவரது கணவர் இதய பிரச்சனை காரணமாக படுக்கையில் விழுந்தார்.

    குழந்தைகள், கணவர், மாமியார் என அனைவரையும் கவனிக்க வேண்டிய சுமை ரஜனியின் தோளில் விழுந்தது.  முதலில் காய்கறி விற்க தொடங்கினார்.  அதில் போதிய பணம் கிடைக்காததால் ஹைதராபாத் மாநகராட்சியில்  (GHMC) மாதம் 10 ஆயிரம் சம்பளத்துக்கு ஒப்பந்த தொழிலாளராக துப்புரவு பணியில் ஈடுபட தொடங்கினார்.

    இதையும் படிங்க: அக்டோபர் மாதம் திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி




    அவரது நிலை குறித்து தெலுங்கு பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. ரஜனியின் படிப்பிற்கு ஏற்ற வேலையை வழங்க வேண்டும் என்று குரல் எழுந்தது. இதையடுத்து சிறப்பு தலைமைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி, அரவிந்த்குமார், ரஜனியை நகராட்சி நிர்வாக அமைச்சர் கேடி ராமாராவ்விடம் அழைத்துச் சென்றார்.



    ரஜனியின் தகுதியை ஆராய்ந்த பின்னர், அவருக்கு பூச்சியியல் துறையில் உதவி பூச்சியியல் நிபுணர் (Assistant Entomologist) பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: