ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாடகை காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜன்னல் வழியாக வீசப்பட்ட 10 மாத குழந்தை.. கொடூர சம்பவம்!

வாடகை காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜன்னல் வழியாக வீசப்பட்ட 10 மாத குழந்தை.. கொடூர சம்பவம்!

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

ஓடும் காரில் 10 கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு டிரைவரும் சக பயணிகளும் பாலியல் தொல்லை தந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இளம் பெண் ஒருவர் போஷிரி என்ற பகுதிக்கு செல்ல சாலையில் வாகனத்திற்காக காத்திருந்துள்ளார். இந்த இளம் பெண்ணிடம் அவருடைய 10 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளது.

அப்போது அங்கு வாடகை கார் ஒன்று அந்த பெண் செல்ல வேண்டிய பகுதி நோக்கி சென்றுள்ளது. அதில் வேறு சில பயணிகளும் இருந்துள்ள நிலையில், ஷேர் செய்து அதில் பயணிக்க முடிவெடுத்து அந்த காரில் தனது கைக்குழந்தையுடன் ஏறியுள்ளார் இளம்பெண். கார் சிறிது தூரம் சென்ற நிலையில், ஓடும் காரிலேயே அந்த பெண்ணை சீண்டிய டிரைவரும் சக பயணிகளும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த நபர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு அந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தை பிடுங்கி காரில் இருந்து வீசியுள்ளனர். இதில் காரில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானது. அத்துடன் அந்த பெண்ணையும் ஓடும் காரில் இருந்து அவர்கள் கீழே தள்ளியுள்ளனர். இதில் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றது.

இதையும் படிங்க: அம்பேத்கர் குறித்த கருத்தால் சர்ச்சை - பாஜக அமைச்சர் மீது கருப்பு மை வீச்சு தாக்குதல்!

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளான கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அம்மாநில காவல்துறை வழக்கு தொடர்பான விசாரணையில் முதல்கட்டமாக காரின் டிரைவர் விஜய் குஷ்வாஹா என்பவரை கைது செய்துள்ளது. மற்ற நபர்களையும் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

First published:

Tags: Maharashtra, Sexual abuse, Sexual harassment