ஹோம் /நியூஸ் /இந்தியா /

1000 ரூபாய் ஸ்வீட்டுக்காக ரூ 2 லட்சத்தை இழந்த மும்பை பெண் - ஆன்லைனில் அல்வா கொடுத்த மோசடி நபர்

1000 ரூபாய் ஸ்வீட்டுக்காக ரூ 2 லட்சத்தை இழந்த மும்பை பெண் - ஆன்லைனில் அல்வா கொடுத்த மோசடி நபர்

இனிப்பு பலகாரங்கள்

இனிப்பு பலகாரங்கள்

மறுமுனையில் இருந்த ஒருவர் அவரது கிரெடிட் கார்டு எண்ணையும், அவளது போனில் வந்த OTPயையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  பெண் ஒருவர் தீபாவளிக்கு இனிப்புகளை ஆர்டர் செய்யும் போது ஆன்லைன் மோசடியால் ₹ 2.4 லட்சத்தை இழந்துள்ளார். போலீசாரின் உடனடி நடவடிக்கையால் பணத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்டது. 

  மும்பை புறநகர் அந்தேரியில் வசிக்கும் 49 வயது பெண் பூஜா ஷா, ஞாயிற்றுக்கிழமை உணவு டெலிவரி செயலியில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டருக்கு ஆன்லைனில் ₹ 1,000 செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. பின்னர் ஆன்லைனில் இனிப்பு கடையின் எண் அழைத்துள்ளார். மறுமுனையில் இருந்த ஒருவர் அவரது கிரெடிட் கார்டு எண்ணையும், அவரது போனில் வந்த OTPயையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லியுள்ளார்.

  கடைசி வாய்ப்பு.. லாபம் கொட்டும் அரசு வங்கியின் சிறப்பு திட்டம் முடிவுக்கு வருகிறது!

  அந்தப் பெண்ணும் கார்டு விவரங்களையும் OTPயையும் பகிர்ந்து கொண்டார். சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்து ₹ 2,40,310 பறிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு ₹ 2,27,205 மாற்றப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் இழந்த பணத்தின் பெரும்பகுதி உடனடியாக மீட்டெடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Cyber crime, Cyber fraud, Maharashtra